Farm Info

Monday, 18 July 2022 03:56 PM , by: Deiva Bindhiya

Seeds at 50% subsidy! Whom should be approached?

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் சான்றளிக்கப்பட்ட மக்காச்சோளத்தின் விதைகள் 50% மானிய விலையில் வழங்க உள்ளன. விவசாயிகள் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை, இப்பதிவில் பார்க்கலாம்.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் சான்றளிக்கப்பட்ட மக்காச்சோளத்தின் விதைகளை மானியத்தில் பெற்றிடலாம். விதையின் விலையில் 50% அதிகபட்சமாக, ஒரு குவிண்டாலுக்கு ரூ.1200/-க்கு உட்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

மானிய விலையில் மக்காச்சோள விதைகளை வழங்கும், இத்திட்டத்தின் எண் 6818 ஆகும்.

எப்படிப் பெறுவது?(How to get?)

விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய முகவரி: கிராம அளிவிலான வேளாண்மை அலுவலர் உதவி வேளாண் அலுவலர்/வட்டார அளவில் துணை வேளாண்மை உதவி இயக்குநர், மாவட்ட அளவில் வேளாண் இணை இயக்குநரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

இத்திட்டம் செயல்படும் இடங்கள் (Places where the scheme operates):

கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், விருதுநகர், தேனி, விழுப்புரம், வேலூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்காச்சோள விவசாயிகளும், இந்தத் திட்டத்தின் கீழ் மானியம் பெறத் தகுதியுடையவர்கள். சிறு/குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 24% எஸ்/எஸ்டி விவசாயிகளுக்கு 20% பெண் விவசாயிகள்/மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும்.

மேலும் படிக்க:

குறுவை தொகுப்பு திட்டத்திற்கு முழு மானியத்துடன் உரம்!

தரிசு நிலங்களில் சாகுபடி செய்ய நலத்திட்டம்: இன்றே விண்ணப்பியுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)