Farm Info

Thursday, 07 April 2022 08:36 PM , by: Elavarse Sivakumar

மீன்பிடிக்க நம்மில் பலருக்கு ஆசை இருக்கும். மீன் சாப்பிடவும் ஆசை இருக்கும். அது இருக்கட்டும் மீன் வளர்க்க நீங்கள் விரும்புகிறீர்களா?அதுவும் நீங்கள் ஒரு பைசா கூட முதலீடு போடாமல், சொந்தத் தொழில் தொடங்க அரசு உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். மீன் வளர்ப்புத் தொழிலுக்கு முழு உதவியும் வழங்கும் மத்திய அரசு திட்டம் அமலில் உள்ளது.

மீன் வளர்ப்பு மற்றும் மீன்பிடித் தொழில் மூலம் வருமானத்தை பெருக்குவதற்காக மத்திய அரசு பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா (Pradhan Mantri Matsya Sampada Yojana) திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மீன் உற்பத்தி, தரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.

அனைத்து மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மீன் உற்பத்தி தொழில் மூலம் பணம் சம்பாதிக்க விரும்புவோருக்கு இது ஒரு சூப்பர் திட்டம். மீனவர்கள், மீன் உற்பத்தியாளர்கள், மீன் சார்ந்த தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள், சுய உதவிக் குழுக்கள், மீனவர் கூட்டமைப்புகள், தொழில் முனைவோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் இத்திட்டம் மூலம் பயனடையலாம்.

பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு உள்ளிட்ட மீன் சார்ந்த தொழில்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. இதில் மத்திய அரசு திட்டம், மத்திய அரசு ஆதரவுடனான திட்டம் என இரு வகை திட்டங்கள் உள்ளன.

மத்திய அரசு திட்டத்தில் மொத்த செலவும் அரசால் ஏற்றுக்கொள்ளப்படும். நீங்கள் எந்த செலவும் செய்யத் தேவையில்லை. மத்திய அரசு ஆதரவுடனான திட்டத்தில் மொத்த செலவில் 60 விழுக்காட்டை மத்திய அரசும், 40 விழுக்காட்டை மாநில அரசும் ஏற்றுக்கொள்ளும்.

மேலும் படிக்க...

கோடை வெப்பத்தைத் தகிக்க வைக்கும் தயிர்- எந்த நேரத்தில் சாப்பிடலாம்?

புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)