சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டும் விற்பனை செய்யுமாறு, விதை விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
சம்பா சாகுபடி (Samba cultivation)
பருவத்திற்கு ஏற்ற வகையில் சாகுபடி செய்வதுதான் விவசாயிகளின் சாமர்த்தியம். அந்த வகையில், தற்போதைய சம்பா பருவத்திற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டத்தில், சம்பா பருவ நெற் பயிர் சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் ஆர்வமுடன் தயாராகி வருகிறார்கள்.
சான்று அட்டை (Proof card)
இந்நிலையில் தனியார் விதை விற்பனையாளர்கள் சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீல நிறம்) முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளையே விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.
14 வகை விவரங்கள் (14 Category Details)
உண்மை நிலை விதைகளுக்கு விவர அட்டை மட்டும் இருக்கும். விவர அட்டையில் பயிர், ரகம், குவியல் எண் காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற பருவம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.
முளைப்பு அறிக்கை (Germination report)
அனைத்து தனியார் விதை விற்பனையாளர்களும் விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் இன்வாய்ஸ் மற்றும் முளைப்பு அறிக்கை கட்டாயம் பராமரிக்கபட வேண்டும்.
விதை இருப்பு பதிவு (Seed balance record)
குவியல் வாரியாக தனித்தனி பக்கங்களில் விதை இருப்பு விவரங்கள் பதிவிட வேண்டும். சம்பா பருவத்துக்கு உகந்த தரமான நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.
பருவம் (Season)
முன் சம்பாபட்டமானது - ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி - பிப்ரவரி வரை உள்ளது. இப்பட்டத்திற்கு 150 முதல் 160 நாட்கள் வயதுடைய நீண்ட கால நெல் இரகங்கள் ஏற்றவையாகும்.
மத்திய கால நெல் ரகங்கள் (Medieval paddy varieties)
பிறகு சம்பா மற்றும் தாளடி பருவமானது செப்டம்பர் - அக்டோபர் முதல்ஜனவரி பிப்ரவரி 15ம் தேதி வரை உள்ளது. இப்பட்டத்திற்கு 125 முதல் 140 நாட்கள் வயதுடைய மத்திய கால நெல் ரகங்கள் ஏற்றவையாகும்.
மேலும் படிக்க...