பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைப்பதால், கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து பட்டு விவசாயிகளும் அங்காடிக்கு கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்யலாம் என, பட்டு வளர்ச்சித்துறை துணை இயக்குனர் பாரூக் தெரிவித்துள்ளார்.
பட்டுக்கூடு விற்பனை அங்காடி(Silkworm Sales Store)
கோவை மாவட்டம், கோவை பாலசுந்தரம் ரோட்டில், பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், கோபி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளைக் கொண்டு வந்து, விற்பனை செய்வது வழக்கம்.
கோவை விவசாயிகளுக்கு மட்டும் (For Coimbatore farmers only)
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகக் கூடுகளைக் கொண்டு வந்து, பிற மாவட்ட பட்டு விவசாயிகள் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு, கோவை விவசாயிகள் மட்டும் கூடுகளை, கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
நல்ல விலை (Good price)
இதனால் பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைப்பதாக, கோவை பட்டு வளர்ச்சித் துறை துணை இயக்குனர் பாரூக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறுகையில்,
பெரும் நஷ்டம் (Great loss)
கடந்த ஆண்டு பரவிய கொரோனா முதல் அலையின்போதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில், பட்டுக் கூடுகளை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் நஷ்டப் பட்டனர்.
புதிய ஏற்பாடு (New Testament)
இரண்டாவது அலை ஊரடங்கால், அவ்வாறு நஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் வகையில், விவசாயிகள் கூடுகளை விற்பனை செய்யவும், பட்டு நூல் உற்பத்தியாளர்கள் கூடுகளை வாங்கவும், பட்டு வளர்ச்சித் துறை ஏற்பாடு செய்துள்ளது. விவசாயிகளுக்கு அனுமதிச் சீட்டு கொடுத்து, கூடுகளை அங்காடிக்குக் கொண்டு வந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்து இருக்கிறோம்.
கிலோ ரூ.400 முதல் ரூ.440 வரை (Rs.400 to Rs.440 per kg)
இதனால், கடந்த ஒரு வாரமாக திருப்பூர் விவசாயிகளும் வருகின்றனர். இப்போது பட்டுக் கூடுக்கு கிலோ ரூ.400 முதல் ரூ.440 வரை விலை கிடைக்கிறது.
தடை இல்லை (No ban)
எனவே கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து பட்டு விவசாயிகளும், கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்யலாம். ஊரடங்கில் எந்த தடையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
7.3 கோடிக்கும் அதிகமானோருக்கு Covid தடுப்பூசி!
குறைந்து வரும் கொரோனா பாதிப்பு : தமிழகத்தில் 244 நாட்களுக்கு பின் 600க்கு கீழ் குறைந்தது!!
டெல்டா பிளஸ் வகை கொரோனாவின் அச்சுறுத்தல்.மூன்று மாநிலங்களுக்கு எச்சரிக்கை!