நம்முடைய விவசாய நிலமான தோட்டத்தில் எறும்புகள் இருந்தால், அவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்துப் பார்ப்போம்.
முதலில் உங்கள் தோட்டத்தில் விவசாயம் இருக்கா அல்லது வெறும் நிலமா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
உழுவது அவசியம் (Plowing is essential)
அவ்வாறு உறுதி செய்யும்போது, அது வெறும் நிலமாக இருந்தால் செய்யவேண்டியது நன்றாக உழவேண்டும்.
எறும்புப்புற்றின் கட்டமைப்பு (Structure of anthill)
நன்றாக மடக்கிப் போட்டு உழவேண்டும். அப்போது ஏறும்பினுடையப் புற்றை ஆய்வு செய்தால் 3 முதல் 4 அடிவரை வளைந்து நெளிந்து நல்ல கட்டமைப்புடன் இருக்கும்.
மோல்ட் ப்லோட் கலப்பை (Mold plot plow)
எனவே இதன் முட்டைகள் எல்லாவற்றையும் அளிக்கவேண்டுமென்றால் அதற்கு வேளாண்துறையிலோ அல்லது வெளியிலோ மோல்ட் ப்லோட் கலப்பைக் கிடைக்கும்.
இந்த கலப்பையைப் பயன்படுத்தினால் கீழ் இருந்து 2 அடி அகலத்திற்குத் தோண்டி மண்ணை திருப்பி போடும் இதனால் எறும்பு புற்றுகள் அழிந்துவிடும்.
வெந்நீர் (Hot Water)
அதுவே செடிகள் இருக்கு என்றால் அதில் எங்கே புற்று இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறுப் புற்று இருந்தால் நீரை நன்றாகக் கொதிக்கவைத்து அந்த வெந்நீரை. புற்றுக்குள் ஊற்ற வேண்டும். இதனால், எறும்புகள் முற்றிலும் அழிந்து போகும்.
ஆனால் இந்த முறையைச் செடி அருகில் இருந்தால் பயன்படுத்த வேண்டாம் .
செடிக்கு அருகில் எறும்பு புற்று இருந்தால் 10 லிட்டர் நீருக்கு 1கிலோ வசம்பை இடித்து போட்டு ஒரு நாள் ஊற வைக்கவேண்டும்.
பின்பு அதைப் புற்றில் ஊற்றுங்கள் எறும்புகள் போய்விடும். செடிகள் மீது அதிகம் எறும்புகள் தென்பட்டால் இந்தக் கரைசலை தெளிக்கலாம்.
மேலும் படிக்க...
விவசாயிகள் தங்கள் விவசாயத்தோடு தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் - மோடி உரை!!
பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!
கணக்கில்லா நன்மை தரும் கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி!