நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 February, 2022 9:46 AM IST
Small onion exports 487% increased!

இந்தியாவின் சின்ன வெங்காய ஏற்றுமதி பெரும் வளர்ச்சியை கண்டு 2013-க்குப் பிறகு 487 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இரண்டு மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த ஏற்றுமதி, 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 11.6 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. இதுகுறித்து மத்திய தொழில், வர்த்தகம், நுகர்வோர் விவகாரங்கள், பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி (Export)

2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக இலங்கை (35.9%), மலேசியா (29.4%), தாய்லாந்து (12%), ஐக்கிய அரபு அமீரகம் (7.5%) மற்றும் சிங்கப்பூர் (5.8%) விளங்குகின்றன.

இந்தியாவின் அன்னாசி ஏற்றுமதியும் சுமார் நூறு சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2013 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 1.63 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்த இதன் ஏற்றுமதி 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 3.26 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது.

2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக ஐக்கிய அரபு அமீரகம் (32.2%), நேபாளம் (22.7%), கத்தார் (16.6%), மாலத்தீவுகள் (13.2%) மற்றும் அமெரிக்கா (7.1%).விளங்குகின்றன.

அனைத்து விதமான ஏற்றுமதியிலும் இந்தியா தொடர்ந்து வளர்ச்சியை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

மேலும் படிக்க

பசுமை வேதி பொருள் மூலம் ஆஸ்துமா, மூட்டு அழற்சிக்கு தீர்வு: சென்னை பெண் விஞ்ஞானிக்கு காப்புரிமை!

ரூ. 31 ஆயிரத்துக்கு ஏலம் போன ஒரு கூடை அல்போன்சா மாம்பழங்கள்!

English Summary: Small onion exports 487% increased!
Published on: 15 February 2022, 09:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now