Farm Info

Wednesday, 14 April 2021 07:26 PM , by: Daisy Rose Mary

Credit : Hindu Tamil

உடுமலை பகுதிகளில் பெரும்பாலும் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு வருகிறது. இந்தாண்டு அளவுக்கு அதிகமான வெயில் தாக்கத்தால் சின்ன வெங்காயத்தில் நுனி கருகல் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், இடுபொருட்களின் விலையும் மளமளவென அதிகரிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 3,000 ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் உள்ளூரில் அறுவடை செய்யப்படும் வெங்காயத்தின் கொள்முதல் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது, 110 நாட்களில் சின்ன வெங்காயம் அறுவடைக்கு வரும். விதை, நாற்று நடவு, களை, உரம், பூச்சி மருந்து என ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய நேரிடுகிறது.

நுனி கருகல் நோய் தாக்கம்

சாதகமான தட்பவெப்ப நிலை, தரமான விதை ஆகியவற்றை பொறுத்து ஏக்கருக்கு 7 டன் முதல் 10 டன் வரை விளைச்சல் கிடைக்கும். கடந்த சில வாரங்களாகவே வெயில்வாட்டி வதைப்பதால், நுனி கருகல் நோய் ஏற்பட்டு சின்ன வெங்காய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. ஏக்கருக்கு 6 டன் முதல் 7 டன் வரை மட்டுமே விளைச்சல்கிடைத்துள்ளது.

விலை வீழ்ச்சி

கடந்த சில மாதங்களாக கிலோ ரூ.70 வரை கொள்முதல் செய்யப்பட்ட சின்னவெங்காயம், தற்போது ரூ.25-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதுவும் முதல் தரமான வெங்காயத்துக்குத்தான் இந்த விலை. இதற்கிடையேஉரத்தின் விலை மூட்டைக்கு ரூ.600வரை உயர்த்தப்பட்டதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேபோல பூச்சி மருந்து, களைக்கொல்லி என வேளாண் இடுபொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

மானிய விலையில் வழங்க கோரிக்கை

வேளாண் இடுபொருட்கள் விலை உயர்வைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக இல்லை என குற்றம்சாட்டிய விவசாயிகள், விலை வீழ்ச்சியில் இருந்து தப்பிக்க சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து விற்கவும் வாய்ப்பில்லை. எனவே வியாபாரிகள் நிர்ணயிக்கும் விலைக்குத்தான் விற்கவேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. விதை, மருந்து, உரம் ஆகியவற்றை மானியமாக மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்க... 

விலை குறைவால், வேதனையுடன் தக்காளியை ஏரியில் கொட்டிய விவசாயிகள்!

தக தகிக்கும் வெயில்! - ஆடு, மாடு கால்நடைகளுக்கும் தண்ணீர் வழங்க அறிவுரை!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)