பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 May, 2023 9:11 AM IST
Solar dryer

தேனி மாவட்டத்தில் பெரும்பாலான நபர்கள் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காமல் போவதால் அவ்வப்போது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தேவைக்கு அதிகமாக விளைபொருட்கள் உற்பத்தியாகும் பொழுது அதனை வீணடிக்காமல் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும் தொழில்நுட்பத்தை விவசாயிகள் தற்போது கற்றுள்ளனர்.

மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள்

விளைவித்த பொருள் வீணாகாமல் தடுப்பதற்கு வாழைக்காய், கொய்யா காய், உலர்திரட்சை, வெற்றிலை, மாங்காய், ஏலக்காய், இஞ்சி, தக்காளி என பல பொருட்களில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

சோலார் உலர்த்தி (Solar Dryer)

விளைபொருளில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பொழுது பொருள்களை நன்றாக சூரிய ஒளியில் காய வைக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த தேவையை சோலார் உலர்த்தி பூர்த்தி செய்து வருகிறது. சோலார் உலர்த்தி மூலம் பொருட்களை காய வைக்கும் பொழுது விரைவாகவும், சுகாதாரமான முறையிலும், உரிய நேரத்திலும் பொருட்களை காய வைக்க முடியும் என்பதால் சோலார் உலர்த்தியின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

சிறிய அளவிலான சோலார் உலர்த்தியிலிருந்து பெரிய அளவிலான சோலார் உலர்த்தி வரை சந்தையில் உள்ளன. விவசாயிகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நபர்கள் தங்களுக்கு தேவைக்கு ஏற்றார் போல் சோலார் உலர்த்தியை வாங்கி கொள்கின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் கம்பம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நபர்கள் அதிகம் சோலார் உலர்த்தியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதற்காக தனியாக சோலார் உலர்த்தி தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கம்பம் பகுதியைச் சேர்ந்த சுகுமார்.

சுகுமார் கூறுகையில், சோலார் உலர்த்தியை இதுவரை பல விவசாயிகளுக்கு செய்து கொடுத்துள்ளேன். விவசாயிகளின் தேவைக்கு ஏற்றார் போல் சோலார் உலர்த்தியை தயார் செய்யலாம். சோலார் உலர்த்தி மூலம் பொருட்களை காய வைக்கும் பொழுது காற்றில் பரவும் தூசியில் இருந்து பாதுகாப்பாகவும், திடீரென மழை வந்தால் மழையிலிருந்து பாதுகாக்கவும், விரைவான நேரத்தில் பொருட்களை காய வைக்கவும் உதவுகிறது. சோலார் உலர்த்தி மூலம் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகள் குறைக்கப்படுவதோடு, வேலை ஆட்கள் குறைவு மற்றும் காலநிலை சேமிப்பு உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளது.

மேலும் படிக்க

7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு திட்டம்: தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு!

நம்ம ஊரு பூண்டுக்கு இவ்வளவு மவுசா: சீனாவை பின்னுக்குத் தள்ளி ஏற்றுமதியில் முதலிடம்!

English Summary: Solar dryer helps farmers: Theni farmers are interested!
Published on: 09 May 2023, 09:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now