நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 August, 2021 7:27 AM IST

விவசாயிகளுக்கு மானிய விலையில் சோலார் மின் இணைப்பு வழங்க உள்ளதாக' வேளாண் உதவி இயக்குநர் சின்னச்சாமி தெரிவித்தார்.

மின் விநியோகத்தில் குளறுபடி (Mess with power supply)

தமிழகத்தில் சமீபகாலமாக விவசாய மின் வினியோகம் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, விவசாயிகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்கவும், விவசாயிகளிடம் மிஞ்சும் மின்சாரத்தை கொள்முதல் செய்வது எனவும் இருவேறு திட்டங்களை வகுத்து அரசு செயல்படுத்த உள்ளது.

ரூ.5 லட்சம் வரை மானியம் (Grant up to Rs. 5 lakhs)

இதன்படி தற்போது மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுக்கு 5 எச்.பி., பம்புசெட்அமைக்க ரூ.3 லட்சம், 7.5 எச்.பி., பம்புசெட் அமைக்க ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

அரசுகளின் பங்கு (The role of governments)

இந்த ரூ.5 லட்சத்தில் மத்திய - மாநில அரசுகளின் மானியம் ரூ.3 லட்சம். மீதி ரூ.2லட்சத்தில் 70 சதவீதம் வங்கிக்கடன் உண்டு. எனவே ரூ.60 ஆயிரம் செலுத்தினால் 5 எச்.பி., சோலார் மின் இணைப்பை பொருத்தி  விடலாம். விவசாயத்திற்குப் போக எஞ்சிய மின்சாரத்தை ஒரு யூனிட் ரூ.2.28 காசுக்கு அரசுக்கு விற்றுவிடலாம். தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சி மூலம் இந்த பணிகள் நடக்கஉள்ளது.

இது குறித்து திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சின்னச்சாமி கூறியதாவது:

மின்சாரத்தில் தன்னிறைவு பெற சோலார் மின் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் விசாகன், வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை தலைமையில் நடந்தது.

விண்ணப்பிக்க அழைப்பு (Call to apply)

தற்போது இலவச மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளுக்கே,சோலார் மின் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை அணுகிக் பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

தமிழக வேளாண் பட்ஜெட் சிறப்பம்சங்கள்!

2021 இல் விவசாயத் துறையில் புதிய வணிக பதிவு வளர்ச்சி 103 சதவிகிதம் உயர்வு

English Summary: Solar power connection in subsidy to farmers - Agriculture announcement!
Published on: 18 August 2021, 05:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now