பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 5 September, 2022 9:26 AM IST
Solar pump sets

திருப்பூா் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக மானிய விலையில் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகள் அமைக்க தகுதியான விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சோலார் பம்ப் செட் (Solar Pump set)

தமிழக அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் முதல்வரின் சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 10 குதிரைத்திறன் வரையிலான மின் கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகள் 70 சதவீத மானியத்தில் அமைக்கும் திட்டம் (40 சதவீதம் தமிழக அரசு மானியம் மற்றும் 30 சதவீதம் மத்திய அரசின் மானியம்) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 2,000 சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகள் ரூ.43.556 கோடி மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், புதிதாக ஏற்படுத்தப்படும் பாசனத்துக்கான கிணறுகள் நில நீா் பாதுகாப்பான குறுவட்ட பகுதிகளில் இருக்க வேண்டும். இதர பகுதிகளில் ஏற்கெனவே உள்ள பாசன ஆதாரத்தில் டீசல் இயந்திரம் பயன்படுத்தி வரும்பட்சத்தில் அதற்கு மாற்றாக இத்திட்டத்தின் கீழ் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகளை அமைத்துக் கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கம்போது சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகளை நுண்ணீா் பாசன அமைப்புடன் இணைத்திட உறுதிமொழி அளிக்க வேண்டும். வேளாண் பணிகளுக்கு ஆற்றுப்படுகை மற்றும் நீா் நிலைகளில் இருந்து 200 மீட்டருக்குள் கான்கிரீட் காரை இடைப்படாத கால்வாய்களிலிருந்து 50 மீட்டருக்குள் நிலத்தடி நீரை இறைப்பதற்கு அனுமதி கிடையாது.

கூடுதல் மானியம் (Extra Subsidy)

மேற்கண்ட தொலைவுக்குள் நிலத்தடி நீரை இறைக்க வேண்டுமானால் பொதுப் பணித் துறையிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். இதில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவைச் சோந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. கலைஞரின் அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் திருப்பூா்: 99427-03222, உதவி செயற்பொறியாளா் தாராபுரம்: 79040-87490, உதவி செயற்பொறியாளா் உடுமலை: 98654-97731 ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

நாட்டு மாடு பண்ணை அமைக்க விவசாயிகளுக்கு ரூ.2 கோடி மானியம்!

50% மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள் விற்பனை..!

English Summary: Solar pump sets at 70% subsidy: Farmers invited to apply!
Published on: 05 September 2022, 09:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now