விவசாயத்தைப் பொருத்தவரை, அது எந்தக் காலமாக இருந்தாலும், ஆயத்தப்பணிகள் இன்றியமையாதவை. எதைச் செய்தாலும் அதற்காக முன்னேற்பாடுகளைச் செய்வது மிக மிக முக்கியம். அப்படி, அறுவடை காலம் முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்ட, விவசாயிகள், மானாவாரி சாகுபடிக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள தற்போது திட்டமிடல் அவசியம்.
அத்தகைய ஆயத்தப் பணிகளில், என்ன என்ன பணிகளை தங்களுடைய நிலத்தில் எவ்வாறு செய்யவேண்டும் என்பதை வரையறை செய்ய வேண்டும் அதாவது உழவன் கணக்கு,நேரம் காலம் பார்த்து செய்தால் கண்டிப்பாக வெற்றி இலக்கை (விளைச்சலை) அடையலாம்.
கவனத்தில்கொள்ள வேண்டியவை
மண் மற்றும் தண்ணீர் மாதிரியை சேகரித்து, அருகேயுள்ள மண்பரிசோதனை நிலையத்தில் கட்டணமாக தலா 20 ரூபாய் வீதம் மாதிரிக்கு செலுத்தி மண்ணின் வளத்தை அறிந்துகொள்ள வேண்டும்.
-
தேவையான அளவு இரசாயன உரங்கள் அல்லது இயற்கை உரங்களை இடுவதன் முலமாக கூடுதலான செலவினத்தை தடுக்கலாம்.
-
கோடை உழவு சித்திரை மாதத்து உழவு பத்திரை மாற்றுதங்கம் என்பது முதுமொழி. உழவு போடுவதால் மண் இறுக்கம் குறைந்து,மழைநீர் ஈர்க்கும்
தன்மை அதிகமாகும்.
-
மண்ணில் உள்ள கூட்டு புழுக்கள் அழிக்கப்பட்டு காற்றோட்டம் வசதி எற்பட கோடை உழவு அவசியம்.
-
வண்டல் மண் அதாவது குள கரம்பை அல்லது கண்மாய் மண் தேவைப்படுகிறது.
-
இந்த மண்ணில் அனைத்து சத்துகளும் உள்ளடங்கி இருப்பதால், இவற்றை விவசாயிகள் எடுத்து தங்களுடைய நிலத்தின், மண்ணின் தன்மைக்கேற்பக் கலந்துகொள்ள வேண்டும்.
-
வண்டல் மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாங்கம் வழி வகை செய்துள்ளது.
-
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நன்செய் நிலத்திற்கு25டிராக்டர் லோடு மண்ணும்,புஞ்சை நிலத்திற்கு 30டிராக்டர் லோடு மண்ணும் இலவசமாக எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
-
இது குறிப்பாக தென்மாவட்டங்களில் கரிசல், செம்மண் மானாவாரி காடுகளில் காணப்படும்.
-
முன்பெல்லாம் மஞ்சனத்தி ஒழிப்பு, எரிபொருட்களாக,விறகுக்காகப் பயன் படுத்தப்பட்டது.
-
குரண்டி முள்,காக்கா முள் இலந்தை முள் போன்ற களை செடிகளும் காணப்படுகின்றன. இவற்றை அழிக்க 2,4,Dஎன்ற இரசாயனத்தை பசை மாதிரி உருவாக்கி,அதன் தண்டு பகுதியில் பூசி விட, விரைவாக காய்ந்துபோன நிலையில் மடிந்து விடும்.
-
இதுபோன்ற பணிகளை இந்த கோடை காலத்தில் செய்து நிலத்தை சாகுபடிக்கு தயார் நிலையில் வைக்க முயற்சிப்போம்.
ஏற்றமிகு விளைச்சலுக்கு அடிப்படையாக இந்த பணிகளை மேற்கொள்வோம்.
தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
மேலும் படிக்க...
முழு முட்டை Vs வெள்ளைக்கரு – எது ஆரோக்கியமானது?
நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!