Farm Info

Monday, 13 June 2022 06:39 PM , by: R. Balakrishnan

Start Coccinia grandis Farming

கொடிவகை தாவரங்களில் ஒன்று தான் கோவைக்காய். இதனை தொண்டைக்கொடி என்றும் அழைப்பார்கள். வேலிகள், தோட்டங்கள் மற்றும் காடுகளில், இந்த கோவைக்காய் கொடி படர்ந்து காணப்படும். இதனுடைய பழங்கள் இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்புத் தன்மை கொண்டதாகும். கோவைக்காயின் நிறம் மற்றும் வடிவத்தைக் கொண்டு இதனை பலவகையாகப் பிரிக்கின்றனர்.

கோவைக்காய் (Coccinia grandis)

தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வணிக முறையில், கோவைக்காய் உற்பத்தியாகி வருகிறது. 15 செ.மீ., நீளமுள்ள பெண் கொடித் தண்டுகளை நடுவதற்கு ஜூன் மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்கள் உகந்தையாக இருக்கும். இதனுடன் 10% ஆண் கொடித்தண்டுகளை நட்டால், அது மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் வகையில் அமையும். கிட்டத்தட்ட 6 மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும். ஏப்ரல் முதல் நவம்பர் மாதங்கள் வரையான காலகட்டத்தில், அதிக மகசூலைப் பெறலாம். கோவைக்காய்களில் கசப்பு மற்றும் இனிப்பு இரகங்கள் உள்ளது. வருடத்திற்கு ஒரு கொடியிலிருந்து 500 முதல் 600 கோவைக்காய்கள் வீதம், ஹெக்டேருக்கு 40 ஆயிரம் கிலோ கோவைக்காய்கள் கிடைக்கும்.

பராமரிப்பு (Maintanence)

கோவைப்பழம் இனிப்பாக இருப்பதால் பழுத்த பின் உண்ணவது சிறந்ததாகும். 100 கிராம் கோவைக்காயில் புரதம் 1.2%, கொழுப்பு 0.1%, நார்ச்சத்து 1.6%, மாவு பொருட்கள் 3.1%, கால்சியம் 40 மி.கி., பாஸ்பரஸ் 30, இரும்பு 1.4 மி.கி., மற்றும் பிற சத்துகள் உள்ளது. இது பந்தல் காய்கறி என்பதனால், ஒருமுறை கிழங்கு நட்டால் 5 வருடங்களுக்கு தொடர்ந்து பயன்தருக் கூடியது. பெண் செடியின் கிளைத் துண்டுகள் தான், கோவைக்காயின் விதைகளாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், வேர்க்கிழங்குகளையும் விதைகளாக பயன்படுத்தலாம். வேர்விட்ட குச்சிகளை, மேட்டு பாத்தி அமைத்து பராமரித்து வரலாம். வலை அல்லது கம்பியில் பிரமிடு பந்தலும் அமைக்கலாம். ஒரு ஏக்கரில் பயிரடப்பட்ட கோவைக்காய்க்கு வேலிக்கம்பி அமைக்க ஏறக்குறைய ரூ.4 இலட்சம் செலவாகும். தோட்டக்கலைத் துறையில் பந்தல் காய்கறிகளுக்கு என்று தனியாக மானிய திட்டம் உள்ளது. இந்த மானியத் திட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோவைக்காய் விவசாயம் செய்வதற்கு வங்கிக்கடனும் கிடைக்கும்.

கோவைக்காய் பயிர்களுக்கு 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. இந்த பந்தல் காய்கறிக்கு சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் உகந்தது. உரமோ, பூச்சிக்கொல்லியோ இதற்குத் தேவையில்லை. அதற்கு மாறாக, இயற்கை உரமான பஞ்சகாவ்யா திரவம் போதும். அறுவடைக்குப் பின் கிலோ ரூ.25க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர்.

கோவைக்காய்களை சமைத்து உண்டால், உடலுக்கு‌ குளிர்ச்சி தரும். சிறுநீர் கோளாறு உடையவர்கள்ஃக்ஷ அடிக்கடி பயன்படுத்தலாம். காயை மோரில் ஊற வைத்து வற்றலாக்கலாம். பந்தல் காய்கறியான கோவைக்காய் வேர் மற்றும் இலைச்சாறு நீரிழிவு நோய்க்கு பயன்படுவதாக நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

மரம் நட விருப்பமா? இந்த விதிமுறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்!

காரிப் பருவ பயிர்களின் கொள்முதல் விலை அதிகரிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)