உரிய ஆவணங்கள் இன்றி விதைகள் விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தரமான விதைகள் (Quality seeds)
விவசாயிகள் சாகுபடி செய்வதில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டும் நெறிமுறைகள் நிறைய இருக்கின்றன. அதில் ஒன்று, தரமான விதைகளை உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து பெறுவது. எனவே இந்த விஷயத்தில் விவசாயிகள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது மிக மிக அவசியம்.
இது குறித்து, கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களில் உள்ள உரிமம் பெற்ற அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டும்.
விதை விற்பனை மையங்களில் விவசாயிகளின் கண்களில் படும்படி இருப்புப் பலகை, விதை விற்பனை உரிமம் ஆகியவற்றை விதை விற்பனையாளர்கள் வைத்திருக்க வேண்டும்.
கவனிக்கப்பட வேண்டியவை (Things to watch out for)
-
இருப்பு பதிவேடு
-
கொள்முதல்
-
விற்பனை பட்டியல்
-
காலாவதி பதிவேடு
-
பதிவு சான்றிதழ்
-
முளைப்புத்திறன் அறிக்கை
-
விதை இருப்பு பலகை
ஆய்வின்போது மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை சரிவர பராமரிக்க படுவதை விதை ஆய்வாளரால் உறுதி செய்யப்பட வேண்டும்.
விற்பனைக்குத் தடை (Prohibition on sale)
விதை விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் போது அனைத்து விதை ரகத்திற்கும் பதிவு சான்றிதழ் மற்றும் அனைத்து விதை குவியல்களுக்கும் முளைப்புத்திறன் அறிக்கையை வினியோகஸ்தர்களிடமிருந்து பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு சான்றிதழ் மற்றும் முளைப்புத்திறன் அறிக்கை பெறாத விதை குவியல்கள் இருப்பின் அதற்கு விற்பனை தடை விதிக்கப்படும்.
விதை விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விதையின் பெயர், ரகம், காலாவதி, தேதி, விதையின் அளவு அடங்கிய ரசீது ஆகியவற்றைத் தவறாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
இவற்றுடன் ரசீதில் விதை விற்பனையாளர்கள் கையொப்பம் மற்றும் விவசாயியின் கையொப்பம் இடம் பெற்றிருத்தல் அவசியம்.
விற்பனையாளர்கள் விதை விற்பனையின் போது அதிகபட்ச சில்லறை விலையை விட, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது.
நடவடிக்கை பாயும்
விதை விற்பனை மையங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள விதைகளிலிருந்து முனைப்புத்திறன் மற்றும் இன தூய்மை பரிசோதனைக்காக விதை ஆய்வாளரால் சேகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
பரிசோதனை முடிவில் விதைகளின் தரம் குறைவாக இருப்பது தெரியவந்தால் விதை உற்பத்தியாளர்கள், விதை வினியோகஸ் தர்கள் மற்றும் விதை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய உரிமம் பெற உரிமையாளரின் புகைப்படம் kanavoolam.tn.gov.in/challanv/echallan என்ற இணையதளம் வாயிலாக ரூ.1000/- செலுத்திய நகல், விற்பனை மையத்தின் இருப்பிட வரைபடம், நில ஒப்பந்த நகல் மூன்றாண்டுகளுக்கு அல்லது வரி ரசீது ஆகிய ஆவணங்களைக் கோவை விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய உரிமம் பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
PM Kisan FPO Yojana : விவசாயிகளுக்கு ரூ. 15 லட்சம் உதவி அளிக்கும் அரசாங்கம்!
பிஎம் கிசான் ஆப்: ரூ. 4,000 பெற செப்டம்பர் 30 க்கு முன் விண்ணப்பிக்கவும்!