தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற மானியம் வழங்கும் திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு விவசாயப் பெருமக்களை வேளாண்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தரிசு நில மேம்பாடுத் திட்டம் (Barren Land Development Project)
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தரிசு நில மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
3 ஆண்டுகளுக்கு மேல் (More than 3 years)
இதில் மூன்று ஆண்டுகளுக்குமேல் இருக்கும் தரிசாக தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டு வரலாம்.
இராஜபாளையம் வட்டாரத்தில் குறிச்சியார்பட்டி, ஜமீன் நத்தம்பட்டி, கிழவிகுளம், தெற்கு வெங்கா நல்லூர், வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம் மற்றும் ஜமீன் நல்லமங்களம் கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
ஹெக்டேருக்கு ரூ.13,000( Rs.13,000 - per hectare)
இதில் தரிசாக உள்ளப் புதர்களை அகற்றவும், நிலத்தைச் சமன்படுத்தவும், உழவு செய்யவும், சாகுபடி செய்யவும், ஹெக்டேருக்கு ரூ.13,000/- மேலாக மானியம் வழங்கப் படுகிறது.
வேண்டுகோள் (Request)
இக்கிராமங்களில் தரிசாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு தரிசு நிலங்களை சரி செய்து சாகுபடிக்கு கொண்டு வர வேண்டும் என இராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் தி.சுப்பையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க...
பருத்தியில் பளிச் லாபம் ஈட்ட- ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு!
விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!