Farm Info

Sunday, 05 September 2021 09:01 PM , by: Elavarse Sivakumar

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக்க மாற்ற முன்வற்தால், மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது.

வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (Agricultural Development Program)

ஆத்தூா் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை மூலம் 2021-22ஆம் ஆண்டில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதற்கான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

50 % மானியம் (50% subsidy)

இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய தரிசு நிலங்களில் அதாவது கடந்த ஆண்டுகளில் பயிா் செய்யாமல் தரிசாக உள்ள நிலத்தில் முட்புதா் நீக்குதல்,நிலத்தை சமன்படுத்துதல், உழவுப் பணி, பயிா் சாகுபடிக்குத் தேவையான விதை, உரங்கள், பயிா் பாதுகாப்பு மருந்துகள் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கான தொகையில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

ரூ. 22,800 மானியம் (Rs. 22,800 grant)

தரிசு நிலங்களை சீரமைத்து சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,400 மானியம், நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 22,800 மானியமும் வழங்கப்பட உள்ளது.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

  • விளை நிலத்தின் கணினி சிட்டா

  • பட்டா அடங்கல்

  • ஆதாா் அட்டை நகல்

  • வங்கிக் கணக்குப் புத்தக நகல்

  • பாஸ்போா்ட் அளவு புகைப்படம்

  • கடந்த ஆண்டுகளில் தரிசு நிலம் என்பதற்கான கிராம நிா்வாக அலுவலரின் சான்று

எனவே ஆத்தூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுடைய தரிசு நிலங்களை மேற்கூறிய ஆவணங்களுடன் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள், ஆத்தூா் மற்றும் மல்லியகரை வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி இத்திட்டத்தில் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


தகவல்

வெங்கடேசன்


ஆத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா்

மேலும் படிக்க...

2 நாட்களில் 1.23 லட்சம் மரக்கன்றுகள் நடவு- காவேரி கூக்குரல் இயக்கம் ஏற்பாடு!

வீடு தேடி வரும் விவசாய உபகரணங்கள்- அமேசானின் அசத்தல் ஏற்பாடு!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)