Farm Info

Monday, 12 October 2020 06:21 AM , by: Elavarse Sivakumar

Credit : Shutterstock

உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மையைக் குறைப்பதற்காக அங்கக முறை எனப்படும் இயற்கை விவசாயத்தில் காய்கறி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என தென்காசி தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சு.ஜெயபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • அங்கக முறையில் தென்காசி மாவட்டத்தில் காய்கனி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தில் கீரை வகை பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ,2,500ம், வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை மற்றும் கொடிவகை பயிா்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.3,750ம் வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

  • இத்திட்டத்தில் கூடுதலாக இயற்கை முறையில் சாகுபடி செய்ய விரும்பும் தோட்டக்கலை விவசாயிகளுக்கும் வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்கப்பட்டு, அங்கக விவசாய திட்டத்தில் பதிவு செய்ய ஒரு விவசாயிக்கு ரூ.500 மானியமும் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.

  • இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் தங்களது நிலப் பட்டா, ஆதாா் அட்டை, நில வரைபடம், பயிா் சாகுபடி திட்ட விவரங்கள், நீா், மண் பரிசோதனை செய்த அறிக்கைகளோடு தங்களது வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி அங்கக வேளாண்மைத் துறையில் பதிவு செய்து உறுப்பினராகி பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

எந்திர நடவு பணிக்கு ஏக்கருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்!

அமெரிக்காவில் ஜக்கி வாசுதேவ் பைக் பயணம்- பூர்வகுடி மக்களை சந்திக்க ஏற்பாடு!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)