மதுரை மாவட்டத்தில் சேக்கிபட்டி, மதிப்பனுார், கிடாரிபட்டி விவசாயிகளுக்கு நபார்டு வங்கியின் மண்வள மேம்பாட்டு திட்டம் மூலம் விவசாய, தொழில்நுட்ப ஆலோசனைகள், மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது. இதுகுறித்து நபார்டு வங்கி உதவிப்பொது மேலாளர் சக்திபாலன் கூறியதாவது: 2021 - 22 ம் ஆண்டில் இந்த திட்டம் துவங்கப்பட்டு 2024 ல் முடிகிறது.
இம்மானியத்தின் திட்ட மதிப்பீடு ரூ.53 லட்சம். நபார்டு வங்கியின் பங்கு ரூ.44 லட்சம்; விவசாயிகளின் பங்களிப்பு ரூ.9 லட்சம். மூன்று கிராமங்களில் காலநிலை மாற்றத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் காலநிலை தழுவல் ஆகியவை இந்திய வேளாண்மை வளர்ச்சி அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
கோடை உழவு (Summer Farming)
இந்தாண்டு சேக்கிபட்டி விவசாயிகளின் 300 ஏக்கரில் இலவசமாக கோடை உழவு செய்துள்ளோம். ஐந்து பண்ணை குட்டைகள் அமைத்துள்ளோம். தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி நடத்தி உள்ளோம். இலவசமாக காய்கறி விதைகள் (Vegetable Seeds) வழங்கியுள்ளோம். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க இயற்கை பூச்சிக்கொல்லி, உரம் இலவசமாக தருகிறோம்.
மூன்றாண்டு முடிவில் விவசாய நிலத்தில் மண் மற்றும் நீர் வளத்தை பெருக்குவது, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றாற்போல விவசாயிகளே விவசாயத்தை சீரமைப்பது தான் என்றார்.
மேலும் படிக்க
நெற்பயிாில் கதிர்நாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!