நம் நாட்டில் எண்ணெய் உற்பத்திக்கு மானியம் வழங்கி விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கத்தலைவர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இறக்குமதி மானியம் (Import subsidy)
விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலைக் கிடைக்காத நிலையில், வெளிநாடுகளில் இருந்து. 70 சதவீதம் எண்ணெய், 50 சதவீதம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றுக்கு மானியம் வழங்குவதால், விவசாயிகளுக்கு பயனும் இல்லை.
எனவே நம் நாட்டில் எண்ணெய் மற்றும், பருப்பு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு, மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.
வாழ்வாதாரம் உயராது (Livelihoods will not rise)
அவற்றை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும். இறக்குமதிக் கொள்கையை மாற்றாத வரை, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயராது. பிற உரங்களின் விலை, 50 கிலோவுக்கு, 1,000 ரூபாய் வரை உள்ள நிலையில், யூரியா 300 ரூபாய்க்கு விற்கிறது. விவசாயிகள் யூரியாவை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக விளைச்சல் அதிகரிக்காது.
லஞ்சம்
பயிரில் நோய் தாக்குதல் ஏற்படும். இந்த விஷயத்தில், அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசு கொள்முதல் நிலையங்களில், லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை.
நோய் பரவல் குறையும் (The spread of the disease will decrease)
லஞ்சம் கொடுக்காமல் நெல் விற்கும் விவசாயிக்கு, பாராட்டு விழா நடத்தத் தயாராக இருக்கிறோம் ஆனால் கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களை வழங்கும் போதுதான், நோய் பரவல் குறையும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதன் மூலம், மருத்துவர் தேவை குறையும். இதன் மூலம், 'நீட்' தேர்வு அவசியமில்லாததாக மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க....
கரிசனம் காட்டாத கனமழை- வெள்ளத்தில் மூழ்கிய 5,500 ஏக்கர் நெற்பயிர்கள் !