மீன் வளர்க்கும் விவசாயிகள் மானியம் பெற விண்ணப்பிக்குமாறு வேளாண்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆதரவுத் தொழில் (Support industry)
விவசாயத்தின் ஆதரவுத் தொழிலாக மீன் வளர்ப்பு கருதப்படுகிறது. அந்த வகையில் மீன்வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டத்தில் மீன் வளா்ப்பு விவசாயிகளுக்கு பல்வேறு மானிய உதவித்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
எவ்வளவு மானியம்? (How much subsidy?)
அதன்படி, கல்குவாரிகளில் உள்ள நீா்நிலைகளில் மிதவை கூண்டுகள் அமைத்து மீன்வளா்த்திட பொதுப் பிரிவினருக்கு 40 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.20 லட்சமும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மகளிருக்கு 60 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1.80 லட்சமும் வழங்கப்பட உள்ளன.
புதிய மீன்வளா்ப்பு குளங்கள் திட்டத்தில் ஒரு ஹெக்டோ் பரப்பளவில் குளங்கள் அமைக்க திட்ட மொத்த செவினம் ரூ.7 லட்சத்தில் பொதுப் பிரிவினருக்கு 40 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2.80 லட்சமும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மகளிருக்கு 60 சதவீதம் அதிகபட்சமாக ரூ.4.20 லட்சமும் மானியம் வழங்கப்பட உள்ளது.
ரூ.4.50 லட்சம் (Rs 4.50 lakh)
பயோ பிளாக் முறையில் மீன்வளா்த்தல் திட்டத்தின்கீழ் மொத்த செலவினம் ரூ.7.50 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம், அதிகபட்சம் ரூ.3 லட்சமும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மகளிருக்கு 60 சதவீதம் அதிகபட்சமாக ரூ.4.50 லட்சமும் மானியம் வழங்கப்பட உள்ளது.
அதே சமயத்தில், நீரினை மறுசுழற்சிமுறையில் தொட்டிகள் அமைத்து மீன்வளா்த்தல் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மொத்த செவினம் ரூ.7.50 லட்சத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம் அதிகபட்சமாக ரூ.3 லட்சமும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் மகளிருக்கு 60 சதவீதம் அதிகபட்சமாக ரூ.4.50 லட்சமும் மானியம் வழங்கப்பட உள்ளது.
வங்கிக்கடன் (Bank loan)
மீன்வளா்ப்பு குளங்களில் மீன்வளா்ப்பு செய்தல், மீன் வியாபாரம் செய்பவா்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தின்படி வங்கிகள் மூலம் கடனும் வழங்கப்பட்டு வருகிறது.
தகுதி (Qualification)
மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள், மீன் சாா்ந்த தொழில் செய்பவா்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுடையவா்களாவா்.
தேர்வு எப்படி? (How to choose?)
இந்த மீன்வளா்ப்புத் திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மீன்வளா்க்கும் விவசாயிகள் பயன்பெறலாம். விண்ணப்பங்கள் அதிகம் பெறப்படுமாயின் பயனாளா்கள் முன்னுரிமை, தகுதியின் அடிப்படையில் தோ்வு செய்யப்படுவா்.
தொடர்புக்கு (Contact)
மீன்வளா்ப்பு திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் மீன்வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா், வேலூா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 93848 24485 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். அடுத்த 2 வாரங்களில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இன்னுயிர் காப்போம் திட்டம்: விபத்தில் சிக்குவோருக்கு இலவச சிகிச்சை!