Farm Info

Wednesday, 15 December 2021 10:06 PM , by: Elavarse Sivakumar

விவசாயத்திற்கு உதவும் காரணிகள் என சிலவற்றைக் கூறினாலும், காற்று, பருவமழை, விலங்குகள் எனத் தடைகள் பல உள்ளன.

வனவிலங்குகள் அட்டகாசம்

இதில் விளைச்சலுக்கு வித்திடும் மழை, பல நேரங்களில் பொய்த்தும், சில சமயங்களில், கொட்டித் தீர்த்தும் விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்து விடுகின்றன.

எப்படியோ இந்த இயற்கைச் சீற்றத்தில் இருந்து, தப்பிப்பிழைக்கும் பயிர்கள் பல வேளைகளில், வனவிலங்குகளிடம் சிக்கிச் சின்னாபின்னமாகி விடுகின்றன. எனவே இந்த பிரச்னையில் இருந்து விவசாயிகள் மீண்டு வர உதவுவது சூரிய சக்தி மின்மோட்டார்கள்.

அந்த வரிசையில், கோவை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயனடையுமாறு, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின் மோட்டார்கள் (Electric motors)

மத்திய அரசின் பிரதமர் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தில், சூரிய சக்தி மின் மோட்டார்கள், 70 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. திட்டத்தில் 5 - 10 எச்.பி., வரையிலான மின் மோட்டார்கள் அமைத்துத் தரப்படுகிறது.

மானியம் (Subsidy)

வேளாண் விளை பொருட்களை அறுவடைக்கு பின், சூரிய சக்தி மூலம் கூடாரங்களில் உலர்த்தி விற்பனை செய்ய, பாலிகார்பனேட் தகடுகளால் ஆன பசுமை குடில்கள் அமைத்துத் தரப்படும். விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப, 400 முதல் 1000 சதுர அடி, பரப்பில் அமைத்து தரப்படும். விவசாயிகளுக்கு மானியமும் வழங்கப்படும்.

மின்வேலி (Electrical fence)

  • விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க, சூரிய சக்தி மின்வேலி அமைத்து தரப்படுகிறது. அதிகபட்சமாக, 565.69 மீட்டர் நீளம், இரு ஹெக்டேர் பரப்பு வரை தனி விவசாயிக்கு அமைத்து தரப்படும்.

  • ஐந்து, ஏழு, 10 வரிசை வேலி கம்பிகளை கொண்ட வேலி அமைக்கப்படும். இதற்கும் மானியம் வழங்கப்படுகிறது.

40% மானியம் (40% subsidy)

தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மரசெக்கு, மாவு அரைக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் நீக்கும் கருவி, தேங்காய் மட்டை உரிக்கும் கருவி, ஆகியவற்றுக்கு அதன் விலையில், 40 சதவீத மானியம் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு, கோவை தடாகம் ரோடு, செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை, 0422 - 2434838, 2966500, பொள்ளாச்சி மீன்கரை ரோடு, உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை, 04259 - 237271 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

வலிப்பு நோய்க்கு நிரந்தர தீர்வு: மருத்துவர் விளக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)