பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகள் சட்டப்பேரவையில் இன்று வெளியிடப்பட்டது. இதில் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அம்சங்கள்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டுப்புழு வளர்ப்பு முதலியன மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பட்டு வளர்ப்பு மேற்கொள்பவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதனால் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பயனுள்ள பல அறிவிப்புகள் இன்று பேரவையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையின் மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகள் சட்டப்பேரவையில் இன்று வெளியிடப்பட்டது. இது குறித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் ரூ.5.25 கோடி மதிப்பில் வெண்பட்டு கூடுகளின் தரத்தை அதிகரிக்க 1000 பட்டு விவசாயிகளுக்கு நவீன பட்டுப்புழு வளர்ப்புத் தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் 300 பட்டு விவசாயிகளுக்கு தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க உதவித் தொகை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
200 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு மல்பெரி தோட்டங்களில் வேலை ஆட்கள் பயன்பாட்டைக் குறைத்துக் தோட்டப் பராமரிப்பு பணிகளை எளிதாக்க பவர் டில்லர் (Power Tiller) கொள்முதல் செய்து வழங்கப்படும். அதேபோல் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் ரூ.2.42 கோடி மதிப்பில் பட்டு வளர்ச்சித் துறையின் அனைத்து செயல்பாடுகளும் கணினி மயமாக்கப்படும் மேலும் ரூ.82 லட்சத்தில் 14 அரசு பட்டு பண்ணைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயன்பெறும் வகையில் இளம்புழு வளர்ப்பு மையம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
தமிழகத்திற்கு 30.6 TMC நீரை உடனே திறக்க உத்தரவு: காவிரி நீர் மேலாண்மை ஆணையம்