தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ் மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தவைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வேளாண் திட்டங்கள், மத்திய அரசு திட்டங்கள், மாநில அரசு திட்டங்கள் போன்ற திட்டங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
2.TNAU வளாகத்தில் போட்டித் தேர்வு இலவச பயிற்சி மையம் துவக்கம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுப் பயிற்சி மையம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்குத் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.வி.கீதாலட்சுமி முன்னிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரும், பயிற்சி இயக்குநருமான டாக்டர்.வி.இறைஅன்பு ஐ.ஏ.எஸ்., போட்டித் தேர்வுப் பயிற்சி மையத்தை ஆன்லைன் முறையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கி வைத்தார்.இப் பயிற்சி மையம் இலவசமாக பயிற்சி அளிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
3.தென்னை விவசாயிகள் பயன்பெற விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் ஏப்ரல் 2023 முதல் தொடக்கம்
தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவைக் கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 காசுகளுக்கும், பந்து கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.117.50காசுகளுக்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்திட அரசு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி 2023 ஆம் ஆண்டிற்கு விலை ஆதரவு திட்டத்தின்கீழ் கொப்பரை கொள்முதல் ஏப்ரல் 1, 2023 முதல் 30 செப்டம்பர் 2023 வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. தேங்காய் கொப்பரைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தர அளவு மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ள அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க: Good News: விரைவில் வங்கி ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை கிடைக்கும்!
4.தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் - கோமாரி நோய் தடுப்பூசி திட்டம்
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் (NADCP) மூலம் 2023 மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 21 ம் தேதி முடிய 3வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் பசு மற்றும் எருமைகளுக்கு போடப்படவுள்ளது. எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய பெருமக்கள் தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 3 மாதத்திற்கு மேற்பட்ட அனைத்து கன்றுகளுக்கும் மார்ச் 31ம் தேதி முடிய தங்களது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
5.வேளாண் கல்லூரியில் 2 நாள்கள் சிறு தானியங்களின் கண்காட்சி
மதுரை, ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் சிறு தானியங்களின் கண்காட்சி திங்கள்,செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றது.இதில் 125 அரங்குகள் அமைக்கப்பட்டு சிறு தானியப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சகம், தமிழ்நாடு குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வேளாண் விற்பனை, வணிகத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இணைந்து சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை கொண்டாட உள்ளது.அதன் ஒரு அங்கமாக, இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
Poly Greenhouse: பசுமைக்குடில் அமைக்க 70% மானியம்! எப்படி பெறுவது?
Coco Peat: தென்னை நாரை முறையாக பயன்படுத்தி, லாபம் ஈட்டலாம் தெரியுமா?