பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 24 November, 2022 5:57 PM IST

அதிக வேலையாட்கள்‌ தேவைப்படும்‌ கரும்பு சாகுபடியில்‌ இயந்திரமயமாக்குதலை ஊக்குவிப்பதற்காக, ரூ.150 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையம்‌ அமைக்க முன்வரும்‌ தொழில்‌ முனைவோர்களுக்கு 40 சதவீத மானியம்‌ அதிகபட்சமாக ரூ.60 இலட்சம்‌ வரை

மானியம்‌ வழங்கப்படும்‌. பங்களிப்புத்‌ தொகைக்கு 3 சதவிகித வட்டி மானியத்துடன்‌ கடன்‌ வசதி,
வேளாண்‌ இயந்திர வாடகை மையம்‌ அமைக்க முன்வரும்‌ விவசாயக்‌ குழுக்களுக்கு, மானியம்‌ போக மீதமுள்ள பங்களிப்புத்‌ தொகையை செலுத்துவதற்கு, வங்கியின்‌ மூலம்‌ கடன்‌ பெற்றுத்தரவும்‌ அரசு நடவடிக்கை எடுக்கும்‌. இவ்வாறு பெறும்‌ கடனுக்கு, வேளாண்‌ உட்கட்டமைப்பு நிதியின்‌ (Agriculture Infrastructure Fund) கீழ்‌ மூன்று சதவிகித வட்டி மானியம்‌ கிடைக்கும்‌.

2.மழை, வெள்ளம் குறித்த புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு, திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளம் சார்ந்த புகார்களைத் தெரிவிப்பதற்கான உதவி எண்கள். திரையில் தோன்றும் இவ் எண்களுக்கு புகார் அளிக்கலாம். 044 27666746 / 04427664177/18005997626 Whatsapp 9444317862/9840327626
ஆகிய வாட்ஸப் எண்கள் மூலமாகவும் பொதுமக்கள் தங்கள் புகார்களை அணுப்பலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்..

3.ஒருங்கிணைந்த காய்கறி விற்பனை வணிக வளாகம் அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

நவம்பர் 23 அன்று எட்டிமடை ஒருங்கிணைந்த காய்கறி விற்பனை வணிக வளாகம் அமைப்பது தொடர்பாக வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சமீரன். இக் கூட்டத்தில் பல முக்கிய காய்கறி வியபாரம் குறித்து அலோசிக்கப்பட்டது. பல முக்கிய முடிவுகளுக்கு இவ் ஆலோசனைக் கூட்டம் ஒரு காரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4.குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகை வழங்கினார்- MLA உதயநிதி ஸ்டாலின்

குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 23 நவம்பர் அன்று தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதிகளில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்பகளில் வசிக்கும் 392 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.94.08 இலட்சித்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.

மேலும் படிக்க: PM Kisan நிதி பெறுவதில் சிக்கல்: இந்த எண்களை தொடர்பு கொள்ளவும் | விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தேதி மற்றும் இடம்

5.3 துணை வேளாண் விரிவாக்க மையம் திறந்து வைத்தார் - அமைச்சர் சா.மு.நாசர்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, பேரம்பாக்கம் பகுதியில் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் கனகம்மாசத்திரம் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட மூன்று துணை வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நவம்பர் 23 பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ், அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து, 40 பயனாளிகளுக்கு ரூ.1.10 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். SM Nasar

6.நபார்டு வங்கி சார்பில் 2023-24 ஆம் ஆண்டின் கடன் திட்ட அறிக்கை

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு வங்கி) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.99 ஆயிரத்து 28. தோனுற்று இரண்டு கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது. கடன் வசதிகள். விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை ஒரு வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும், வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கி சார்பில் 2023-24 ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி முன்னிலையில் வெளியிட்டார்.

7.வரப்பு பகுதியில் உளுந்து பயிரிடுவதை துவக்கி வைத்தார் - கண்காணிப்பு அலுவலர்

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலுருமான திருமதி.பா.ஜோதி நிர்மலாசாமி, அவர்கள் 23 நவம்பர் அன்று தோவாளை வட்டம், சகாயநகர் பகுதியில் வரப்பு பகுதியில் உளுந்து பயிரிடுவதை துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி, அ.சிவப்பிரியா உதவி ஆட்சியர் பயிற்சி திரு.குணால் யாதவ், உட்பட பலர் உள்ளார்கள்.

8. இந்தியா விவசாய அமைச்சகம் மற்றும் MEA இணைந்து ‘தினை மதிய உணவு’ நிகழ்வு ஏற்பாடு

இந்திய அரசின் முன்மொழிவு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) 2023 ஆம் ஆண்டை
சர்வதேச தினை ஆண்டாக அறிவித்தது, பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் தினை நுகர்வு அதிகரிக்க தினை மதிப்பு சங்கிலியை வலுப்படுத்துதல் (IYOM-இன் நோக்கமாகும்). IYOM 2023 ஐ "மக்கள் இயக்கமாக" மாற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால், இந்திய அரசு பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதில் முன்னணியில் உள்ளது.
வியாழன் அன்று நடைபெறும் உத்தியோகபூர்வ மதிய விருந்தில் இந்தியாவிற்கான 60க்கும் மேற்பட்ட நாடுகளின் உயர் ஸ்தானிகர்கள்/தூதர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9. India - Japan food and Agriculture Symposium ஏற்பாடு

இன்று India - Japan food and Agriculture Symposium நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு le meridian புது தில்லியில் நடைப்பெற்றது. முன்னணி உணவு மற்றும் விவசாய நிறுவனங்களின் ஜப்பானிய பிரதிநிதிகள் குழு தளத்தில் பங்கேற்கிறது. இதில் பல முண்ணனி வேளாண் துறையை சார்ந்தவர்கள் பங்கேற்றனர்.

10. TNAU புதுமையான காலநிலை அபாயக் காப்பீட்டுத் திட்டத்தில் செயல்படுகிறது

கோயம்புத்தூர்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU) பயிர்க் காப்பீட்டின் செயல்திறனை மேம்படுத்த புதுமையான காலநிலை அபாயக் காப்பீடு என்ற திட்டத்தில் செயல்பட்டு வருகிறது. ரிமோட் சென்சிங் தொழில்நுட்பம் மற்றும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி, நிகழ்நேர பயிர் நிலையை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று TNAU துணைவேந்தர் வி.கீதாலட்சுமி புதன்கிழமை தெரிவித்தார். "ஒவ்வொரு விவசாயி, அவர்கள் வசம் உள்ள நிலம், அவர்கள் சாகுபடி செய்யும் நீர் ஆதாரம் மற்றும் பயிர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும். இந்த சோதனையில் திருவாரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து 200 விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன " என்றார் கீதாலட்சுமி.

மேலும் படிக்க:

கரும்பு சாகுபடி செய்யும் இயந்திரம்: வாடகை மையம்‌ நிறுவ அரசு ரூ.60 லட்சம் மானியம்‌ 

70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்: Full List இதோ!

English Summary: Tamilnadu Agri news: Rs.60 lakh subsidy for establishment of rental center| Here is the Whatsapp No. to complain about rain and flood
Published on: 24 November 2022, 04:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now