Farm Info

Wednesday, 09 June 2021 07:39 AM , by: Daisy Rose Mary

Credit : Maalaimalar

தென்காசி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு வாடகையின்றி வேளாண் கருவிகள் வழங்கப்படவுள்ளது, விவசாயிகள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாடகையின்றி வேளாண் கருவிகள்

இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 2 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு வாடகை எதுவும் இல்லாமல் விவசாய பயன்பாட்டுக்காக டிராக்டர் மற்றும் வேளாண் கருவிகளை வழங்கும் திட்டத்தை டிராக்டர்ஸ் அன்ட் ஃபார்ம் எக்யுப்மென்ட்ஸ என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்திட்டம் வரும் ஜூலை மாதம் மூன்றாவது வாரம் வரை செயல்படுத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

இந்த வசதியை பயன்படுத்த விரும்பும் விவசாயிகள் 18004200100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பதிவு செய்யலாம்.

விவசாயிகள் ஆண்ட்ராய்டு செல்போனில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மைத் துறையின் களப்பணியாளர் களையோ, வட்டார, மாவட்ட அலுவலர் களையோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அலுவலக நேரம் அல்லாத நேரங்களில் அழைக்கும் விவசாயிகளின் தொடர்பு எண்கள் இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டு, பணியாளர் வந்த பின்னர் விவசாயிகளை தொடர்புகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட விவசாயிகள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க...

வேளாண் இயந்திரங்களை வாடகையின்றி இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம் - விவசாயிகளுக்கு அழைப்பு!!

விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வாடகை திட்டம் - டஃபே நிறுவனம் அறிமுகம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)