இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 June, 2022 4:52 PM IST
Improve soil quality

விவசாயம் செழிப்பாக வளர்வதற்கு தொன்றுதொட்டு விவசாயிகளுக்கு உதவி வருபவை மாடுகள் தான். ஏர் உழுதலில் இருந்து, உரத் தயாரிப்பு வரை மாடுகளின் பயன்கள் அளப்பரியது. விவசாயத்திற்கு மாடுகளை பயன்படுத்திய நம் முன்னோர்கள், அவற்றின் சாணம் மற்றும் கோமியத்தின் மூலம் மண்வளத்தையும் அதிகரிக்கச் செய்தனர். புதிதாக தோன்றிய நவீன விவசாயத்தில், இயற்கை உரங்களின் பயன்பாடு குறைந்தே விட்டது. மேலும், செயற்கை உரங்களின் பயன்பாடு உயர்ந்ததால் மண்வளமும் தற்போது குறைந்துள்ளது.

மண் வளம் (Quality of Soil)

அங்கக சத்துகள் அதிகம் இருந்தால் தான், மண்ணில் புழுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். வளிமண்டல நைட்ரஜனை, மண்ணில் நிலைநிறுத்தி வைக்கும் அசோஸ்பைரில்லம், ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாக்களின் பெருக்கமும் அதிகரிக்கும். இதற்கு மட்கிய மாட்டுச் சாணம், ஆட்டுப் புழுக்கை, கோழி எருவை இட்டும் இலை உரங்களான சணப்பு, தக்கைப் பூண்டு மற்றும் கொழுஞ்சியை விளைநிலத்தில் விதைத்து மண் வளத்தினை அதிகரிக்க வழிவகை செய்யலாம்.

நெல் வயல்களுக்கு தண்ணீர் வசதி இருக்கும் என்பதால் தக்கைப்பூண்டு மற்றும் சணப்பு விதைத்து, அவை பூப்பதற்கு முன்பாக மடக்கி உழுது விட வேண்டும். மானாவாரி மற்றும் குறைந்த தண்ணீர் வசதியுள்ள நிலங்களில், மாட்டுச் சாணத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் பரப்ப வேண்டும். இதை விடவும் மிக எளிய தீர்வு ஒன்று உள்ளது; அதுதான் கிடைபோடுதல். ஆட்டுக்கிடை மற்றும் மாட்டுக்கிடை போடுவதன் மூலம் மண்ணின் வளத்தை பன்மடங்கு பெருக்கலாம்.

ஆட்டுக்கிடை (Aatu kidai)

ஏறக்குறைய 500 ஆடுகள் கொண்ட கிடையை நாள் ஒன்றுக்கு, 25 சென்ட் நிலப்பரப்பில் அடைப்பதன் மூலம், ஏக்கருக்கு 4 நாட்கள் ஆட்டுக்கிடை அமர்த்தலாம். ஆட்டுப்புழுக்கை மற்றும் அதன் சிறுநீர் நிலத்தில் கலந்து மண்ணின் கரிமச்சத்தை ஓரளவு ஈடுசெய்து விடும். நிலம் முழுவதிலம் கிடை அமர்த்திய பிறகு, மழை பெய்வதற்கு முன்னால் நிலத்தை உழ வேண்டும். இல்லையெனில் சத்துகள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு விடும். நாம் கிடை போடுவதும் வீணாகி விடும். ஆகையால், மழை வருவதற்கு முன்பே உழுது விடுவது நல்லது.

மாட்டுச் சாணத்தை விடவும், ஆட்டுச் சாண எருவில் 3% நைட்ரஜன், 1% பாஸ்பரஸ், 2% பொட்டாசியம் சத்துக்கள் இருப்பதால் ஆட்டுக்கிடையை பயன்படுத்துவது மிக நல்லது. இதன் மூலம், மண்வளமும் விரைவில் பெருகும்.

மேலும் படிக்க

குவைத்துக்கு மாட்டுச் சாணம் ஏற்றுமதி: இயற்கை விவசாயத்திற்கு வழிவகை!

சீமைக்கருவேல மரத்தை அகற்ற இயந்திரம் கண்டுபிடிப்பு: மதுரை மாணவி அசத்தல்!

English Summary: The best way to improve the soil is to Aatu kidai Podudhal!
Published on: 21 June 2022, 04:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now