பாசனப்பகுதியில் சம்பா, தாளடி சாகுபடிக்குப் பிறகு நெல் தரிசில் பயறு வகைப் பயிர்கள் சாகுபடி (Cultivation of Lentils) முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் 5.36 லட்சம் எக்டரில் பயறுவகைகள் பயிரிடப்பட்டு ஆண்டுக்கு 1.80 லட்சம் டன் உற்பத்தி (Production) கிடைக்கிறது. குறிப்பாக நெல் தரிசில் 1.56 லட்சம் எக்டர் பரப்பளவில் பயறுவகைப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் உற்பத்தி குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
உற்பத்தி குறைய காரணங்கள்
நிலத்தைச் சரியாக பண்படுத்தாமல் விதைத்தல், பருவம் தவறி விதைத்தல், தரமற்ற குறைந்த உற்பத்தித் திறன் கொண்ட ரகங்களைப் பயிரிடுதல், குறிப்பிட்ட விதையளவைப் (Seed level) பயன்படுத்தி பரிந்துரைக்கபட்ட பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்காமை, பூசணக் கொல்லி மற்றும் உயிர் உரங்களில் விதை நேர்த்தி (Seed treatment) செய்யாமல் விதைத்தல் போன்றவை ஒரு காரணம். பயிர்கள் வளர்ந்தபின் களை நிர்வாகம், பயிர் வளர்ச்சி ஊக்கி (Crop growth stimulant) பயன்படுத்தாமை, பூக்கும், காய்க்கும் தருணங்களில் வறட்சி (Dry), பூச்சி (Pest), நோய்களைக் கண்டறியாததது மீதமுள்ள காரணங்கள்.
அதிக மகசூல் பெற வழிகள்:
நெல் தரிசில் சம்பா, தாளடி சாகுபடிக்குப் பிறகு மார்கழி, தை மாதங்களில் பயறுவகைப் பயிர்கள் சாகுபடியை (Cultivation) மேற்கொள்ளலாம். உளுந்து - ஏடிடீ 3, ஏடிடீ 6 மற்றும் பாசிப்பயறு - ஏடிடீ 3 பயன்படுத்தலாம். பயிர் எண்ணிக்கை பராமரிப்பு (Crop count maintenance) அவசியம் என்பதால், எக்டருக்கு 30 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வெண்டும். சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு (Paddy Harvest) 7-10 நாட்களுக்கு முன் மண் ஈரம் மெழுகுப் பதத்தில் இருக்கும் போது விதைக்கலாம். இல்லையெனில் பாசனம் செய்து மெழுகுப் பதம் வந்த பின் விதைக்கலாம் அல்லது நெல் அறுவடை செய்த பின் மெழுகுப் பதத்தில் நெல் தாள்களுக்கிடையில் வரிசையில் ஊன்றலாம்.
ஆற்றுப் பாசன பகுதியில் நெல் தரிசு உளுந்தை எக்டருக்கு 30 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும். அதன்பின் 2 முதல் 3 நாட்களில் செயின் பொருத்திய அறுவடை இயந்திரம் (Harvest Machine) மூலம் நெல்லை அறுவடை செய்தால் உளுந்தின் பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட்டு அதிக மகசூல் (Yield) பெற முடியும். இம்முறையில் விதைத்த 30 நாட்கள் வரை களைகள் போட்டியிட்டு வளர்ந்து மகசூலைப் பாதிக்கும் என்பதால் அவற்றை அகற்றுவது அவசியம்.
நெல் தரிசு பயிரில் விதைத்த 18-20 ம் நாள் அதாவது சம்பா நெல் அறுவடை (Samba paddy harvest) செய்த 10 ஆம் நாள் 'குயிஸலாபாப் ஈத்தைல் (Quisalabab Ethyl)' என்ற களைக்கொல்லியை எக்டருக்கு 1 லிட்டர் அளவில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. சேர்த்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் வயலில் உள்ள புல் வகை களைகள், நெல் மறுதாம்பு பயிர் மற்றும் அறுவடையின பொழுது விழுந்து முளைத்த நெல் நாற்றுகள் (Paddy Seedlings) கட்டுப்படுத்தப்படும். உளுந்து பயிருக்கு மண்ணில் உள்ள எஞ்சிய ஈரம் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கிடைக்கும்.
இலைவழி உரமிடல்
பயறு வகைப் பயிர்களில் இலைவழி உரமிடல் (Foliar fertilization) முக்கியமானது. நெல் தரிசில் அடியுரம் இடமுடியாது என்பதால் இலைவழி உரமாக 2 சதவிகிதம் டி.ஏ.பி. கரைசல் தெளித்தால் விளைச்சல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். எக்டருக்கு 10 கிலோ டி.ஏ.பி. உரத்தினை 10-15 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து, அந்த கரைசலை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளில் படும் படி தெளிக்க வேண்டும். பூக்கும் தருணமான விதைத்த 25ம் நாளும் 15 நாட்கள் கழித்து காய் பிடிக்கும் தருணத்தில் மீண்டும் தெளிக்க வேண்டும். காலை அல்லது மாலை வேளையே கரைசலை தெளிக்க வேண்டும்.
கோவை வேளாண்மை பல்கலையின் ( Covai Agriculture university) பயறு ஒன்டர் விளைச்சலை அதிகரிக்கும். எக்டருக்கு 5 கிலோ அளவில் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்கள் பூக்கும் சமயத்தில் காலை நேரத்தில் இலை வழி தெளிக்க வெண்டும். பூக்கின்ற 25 சதவிகித பூக்களே காய்க்கும். ஆகவே இலை வழி உரம் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் கொண்டு பூ உதிர்வதைத் கட்டுப்படுத்தி விளைச்சலை 20 சதவீதம் வரை அதிகரிக்கலாம். எண்பது சதவீதத்துக்கும் அதிகமான காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் செடிகளைத் தரைமட்டத்திற்கு அரிவாளால் அறுவடை (Harvest) செய்ய வேண்டும். மண்ணின் அடியிலுள்ள வேர்கள் மண்வளத்தை பெருக்கும். அறுவடை செய்தவற்றை கட்டி வைத்து பின்பு வெயிலில் காய வைத்து மணிகளைப் பிரித்து எடுக்கலாம். வேண்டும்.
-சுப்பிரமணியன், உதவி பேராசிரியர்
சதீஷ்குமார், ஆதித்யன், ஆய்வாளர்கள்
உழவியல் துறை,
மதுரை விவசாய கல்லுாரி
90034 28245
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
வறண்டு போனாலும், தண்ணீர் நின்றாலும் நிரந்தர வருமானம் தரும் கோரை சாகுபடி!
விவசாய பயிர்கள் கடன் தள்ளுபடி அரசாணை வெளியிட்டார் தமிழக முதல்வர்!