Farm Info

Friday, 02 September 2022 07:38 PM , by: R. Balakrishnan

Farmers

மத்திய அரசு பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா என்ற பயிர் காப்பீடு திட்டத்தை கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இயற்கை சீற்றங்களால் பயிர் சேதம் மற்றும் நஷ்டத்தை சந்திக்கும் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிப்பது இதன் நோக்கம். இதன்படி பருவம் மற்றும் பயிர்களுக்கு ஏற்ப விவசாயிகள் பிரீமியம் தொகையில் அதிகபட்சம் 5 சதவீதத்தை செலுத்த வேண்டும். மீதித் தொகையை மத்திய மாநில அரசுகள் பகிர்ந்து அளிக்கின்றன .

பயிர் காப்பீடு (Crop Insurance)

2019 -2020 பயிர் ஆண்டு முதல் 2022- 2023 பயிர் ஆண்டு வரையிலான காலத்துக்கு 18 காப்பீட்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் விவசாயிகள் அதிகமான இழப்பீடு கோரியதால் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் 2021- 2022 ஆம் ஆண்டில் 8 நிறுவனங்கள் வெளியேறி விட்டன.

தற்போது 10 காப்பீட்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. ஆனால் நிறுவனங்கள் இடையே போட்டி குறைந்து விட்டதால் அந்த நிறுவனங்கள் பிரீமியம் தொகையை உயர்த்தி கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். இதனால் இந்த பயிர் காப்பீட்டு திட்டம் காப்பீடு நிறுவனங்களுக்கு தான் நன்மை பயப்பதாகும், விவசாயிகளுக்கு நன்மை செய்யவில்லை என்று மாநில அரசுகள் கருத்து தெரிவித்தன.

மாற்றம் (Change)

இதையடுத்து கடந்த ஆண்டு மத்திய வேளாண் அமைச்சகம் ஒரு சிறப்பு குழுவை அமைத்தது. விரிவான ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் பயிர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த இருவித அணுகுமுறைகளை சிபாரிசு செய்துள்ளது. இதன் அடிப்படையில் பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகமான காப்பீடு நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கவும் பிரீமியம் தொகையை குறைக்கவும் இந்த மாற்றத்தை செய்ய திட்டமிட்டுள்ளது. மத்திய மந்திரிசபை ஒப்புதலுக்கு பிறகு 2023- 2024 ஆம் ஆண்டிலிருந்து இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு 25% மானிய உதவி: வெளியானது அருமையான அறிவிப்பு!

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! இந்தப் பயிர்களுக்கு காப்பீடு செய்யுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)