தேனீ வளர்ப்பும், தேன் எடுப்பதும் மிகவும் சிக்கலான தொழில். இருப்பினும் தமிழகத்தில் சிலர் சிறந்த முறையில் தேனீக்களை வளர்த்து, தரமான தேனை விற்பனை செய்து வருகின்றனர். தேனீ வளர்ப்பில் நேரம் அதிகளவு எடுத்துக் கொள்வது உண்மை தான். நேரத்தை மிச்சப்படுத்த கண்டுபிடிக்கப்பட்டுள்ளது புது வகையான ரோபோ (Robot).
தேனீ வளர்ப்பில் ரோபோ:
தேனீ வளர்ப்பில் நேரத்தையும், அதில் இருக்கும் சிக்கலையும் பாதியாகக் குறைக்க, ரோபோவை (Robot) பயன்படுத்தலாம் என்கிறது, தென்கொரியாவை (South Korea) சேர்ந்த, 'டேசுங்' என்ற நிறுவனம். டேசுங், தயாரித்துள்ள ஹைவ் கண்டரோலர் (Hive Controller) என்ற ரோபோவை, ஒரு தேனீ பெட்டியின் மூடியை திறந்து, பெட்டியின் மேல் வைத்துவிடவேண்டும். பிறகு, அந்த ரோபோவே மெதுவாக பெட்டிக்குள் உள்ள தேன்கூட்டு சட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து, தேனீக்களை விரட்டி, தேனை வடித்து எடுத்துவிட்டு மீண்டும், பெட்டிக்குள் வைத்துவிடும்.
மிச்சமாகும் நேர விரயம்:
ரோபோவால், 90 சதவீதம் ஆட்கூலியும், 75 சதவீத நேர விரயமும் மிச்சமாவதாக டேசுங் நிறுவனத்தின் இணையதளம் தெரிவிக்கிறது. தேனீ எடுப்பவர்களுக்கு உடல் சோர்வும், தேனீக் கடியும் மிச்சம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். உலகத்தில் எந்திரங்களின் (Machines) எண்ணிக்கையும், டிஜிட்டல் (Digital) பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தென்கொரியாவின் இந்த ரோபோ உலகமெங்கும் பிரபலமடையும் என்பதில் ஐயமில்லை.
தென்கொரியாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த ரோபோ, மற்ற நாடுகளின் சந்தையில் விரைவில் விற்பனைக்கு (Sales) வரவிருக்கிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் மீன்களுக்கு ஏற்ற இயற்கைப் பை!
வாழை, மூங்கில், பூச்செடிகள் உற்பத்திக்காக ரூ.50 லட்சத்தில் திசு வளர்ப்பு மையம்!
விவசாயிகளே விதை ஈரப்பதத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள்!