பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 6 February, 2023 1:57 PM IST
The price of small onions is likely to decrease! TNAU information

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டமானது, சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்தீர பிரதேசம்‌ மற்றும்‌ ஒடிசா ஆகிய மாநிலங்களில்‌ அதிகளவு சின்ன வெங்காயம்‌ பயிரிடப்படுகிறது சின்ன வெங்காயம்‌ பயிரிடப்படுவதிலும்‌, வியாபாரம்‌ செய்வதிலும்‌ தமிழகத்திற்கு கர்நாடகா முக்கிய போட்டியாளராக திகழ்கிறது. தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும்‌ தோட்டப்பயிர்த்‌ துறையின்‌ அறிக்கையின்‌ படி, 2020-21ம்‌ ஆண்டில்‌ தமிழ்நாட்டில்‌ சின்ன வெங்காயம்‌ 0.51 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்‌பட்டு 3.80 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்‌ நாட்டில்‌, மொத்த வெங்காய பரப்பளவில்‌ 80 சதவீதத்திற்கும்‌ மேல்‌ சின்ன வைங்காயமும்‌ மீதம்‌ பல்லாரி வெங்காயமும்‌ பயிரிடப்படுகின்றன. திண்டுக்கல்‌, தீருப்பூர்‌, பெரம்பலூர்‌, திருச்சி மற்றும்‌ நாமக்கல்‌ ஆகிய மாவட்டங்களில்‌ சின்ன வெங்காயத்தை அதிகளவு பயிரிடகின்றனர்‌.

தற்போது, கோயம்புத்துர்‌ சந்தைக்கு ராசிபுரம்‌, துறையூர்‌, சத்தியமங்கலம்‌ மற்றும்‌ திருப்பூர்‌ உள்ளிட்ட பகுதிகளில்‌ இருந்து சின்ன வெங்காயம்‌ வருகிறது. வர்த்தக மூலங்களின்படி, கர்நாடகா மற்றும்‌ தமிழ்நாட்டில்‌ பெய்த பருவமழை காரணமாக பயிர்‌ சேதமடைந்து உள்ள காரணத்தால்‌ தமிழ்நாட்டு சந்தைக்கு சின்னவெங்காயம்‌ வரத்து குறைந்துள்ளது. இதனால்‌ சின்ன வெங்காயத்தின்‌ விலை சமீப காலமாக அதிகரித்து காணப்பட்டது.

மேலும் படிக்க: இந்திய கடலோர காவல்படை ஆட்சேர்ப்பு 2023: 255 Navik பணியிடங்கள்

நடப்பாண்டின்‌ பயிர்‌ அறுவடை மற்றும்‌ கர்நாடக வரத்து காரணமாக பிப்ரவரி-மார்ச்‌ 2023ல்‌ சின்ன வெங்காயத்தின்‌ விலை குறைய வாய்ப்புள்ளது என எதிர்‌பார்க்கப்படுகிறது.

விலை முன்னறிவிப்புத்‌ திட்டமானது, கடந்த 23 ஆண்டுகளாக திண்டுக்கல்‌ சந்தையில்‌ நிலவிய சின்ன வெங்காயம்‌ விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின்‌ அடிப்படையில்‌, தரமான சின்ன வெங்காயத்தின்‌ சராசரி பண்ணை விலை பிப்ரவரி முதல்‌ மார்ச்‌ 2023 வரை கிலோவிற்கு ரூ.35 முதல்‌ ரூ.40 வரை இருக்கும்‌ என கணிக்கப்‌பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில்‌, விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு தொலை பேசி எண்கள்‌ : 0422 -2431405, 6611278, 661134 தொடர்பு கொள்ளலாம்‌.

கடந்த மாதம், அன்னுார் சந்தையில், சின்ன வெங்காயம் விலை, கிலோ 110 ரூபாயை எட்டியது.

கோவை மாவட்டம், அன்னுாரில், சனிக்கிழமை வார சந்தையில், நேற்று ஒரு கிலோ வெங்காயம் 110 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த சில வாரங்களில் இதுவே அதிகபட்சமாகும்.

வியாபாரிகள் கூறுகையில், 'அன்னுார் சந்தைக்கு வழக்கமாக ஐந்து டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். ஆனால், இன்று (நேற்று) இரண்டு டன் வெங்காயம் மட்டுமே வந்தது‍. இதில் தரமான சிறிய வெங்காயம் ஒரு கிலோ 110 ரூபாய்க்கு விற்பனையானது. சற்று தரம் குறைந்த சிறிய வெங்காயம் 90 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர் மழையால், சில பகுதிகளில் வெங்காயம் அழுகி, வரத்து குறைந்துள்ளது' என்றனர்.

தக்காளி, பெரிய வெங்காயம் உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலை, ஓரளவு நிலையாக இருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் இறுதியில் பெய்த கனமழையால், சின்ன வெங்காயத்தின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:

தற்காலிக மூங்கில் பந்தல் அமைக்க ரூ.25,000 மானியம்! Apply Today

‘மஹிளா சம்மன் பச்சத் பத்ரா’ திட்டம் வீட்டியிலிருந்த படி பெண்கள் 7.5 வட்டி பெறலாம்

English Summary: The price of small onions is likely to decrease! TNAU information
Published on: 06 February 2023, 12:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now