நீங்களும் விவசாயத்தில் ஆர்வமாக இருந்தால், அதன் மூலம் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு ஒரு அருமையான தொழில் வாய்ப்பு உள்ளது. இந்தத் தொழில் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் பெரிய லாபம் சம்பாதிக்கலாம். இந்தத் தொழிலைச் செய்ய நீங்கள் அதிகம் அலைய வேண்டியதில்லை. ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் வருமானம் தரும் வாழை சாகுபடியைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
வாழை விவசாயம் (Banana Cultivation)
ஒருமுறை வாழை செடியை நட்டால், அதில் 5 ஆண்டுகள் வரை பழங்கள் கிடைக்கும். இந்த வகை விவசாயத்தில் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டலாம். இந்த விவசாயத்தில் விவசாயிகளுக்கும் உடனடி பணம் கிடைக்கும். தற்போது நாட்டின் பல விவசாயிகள் வாழை பயிரிட்டு நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.
எவ்வளவு செலவாகும்?
வாழை விவசாயம் செய்ய சுமார் 50,000 ரூபாய் செலவாகும். ஒரு பைகா நிலத்தில் பயிரிட்டால் 50,000 ரூபாய் செலவழிக்க வேண்டும். (ஒரு பைகா என்பது 0.619 ஏக்கர்) அதே சமயம் பெரிய அளவில் பயிரிட வேண்டும் என்றால் அதற்கு ஏற்ப அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
லாபம் (Profit)
வாழை விவசாயத்தில் லாபம் என்று பார்த்தால், 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை லாபம் தாராளமாகக் கிடைக்கும். அதே சமயம், ஒரு ஏக்கர் அளவு நிலத்தில் விவசாயம் செய்தால் சாகுபடி செய்த பயிரை 3 முதல் 3.5 லட்சத்துக்கு விற்கலாம்.
வாழை செடியை நடவு செய்த பிறகு பழம் பழுக்க 12 முதல் 13 மாதங்கள் ஆகும். பழுத்த பிறகு மஞ்சள் அல்லது சிவப்பு நிறமாக மாறும். அதன் பின்னர் வாழைத்தாரை நீங்கள் சந்தையில் விற்பனை செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம். அதே வாழை மரத்தில் அடுத்த பருவத்தில் வாழைப்பழ உற்பத்தி மீண்டும் தொடங்கும். எனவே இதுவொரு நல்ல லாபம் தரும் தொழிலாகும்.
நல்ல தொழில்
வாழைப்பழங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான். இந்தியா உலகின் மொத்த வாழைப்பழ உற்பத்தியில் சுமார் 25 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் சுமார் 2 லட்சத்து இருபதாயிரம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்படுகிறது. பெரும்பாலான கிராமங்களில் நெல் போன்ற பயிர்களை விட வாழை உற்பத்தியில் நிறையப் பேர் ஈடுபடுகின்றனர்.
மேலும் படிக்க
விதைப்பண்ணை அமைப்பது எப்படி? விதிமுறைகள் சொல்வது என்ன?
தேங்காய் விற்பனையில் குவியும் வருமானம்: விவசாயிகள் மகிழ்ச்சி!