மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 September, 2020 3:05 PM IST

தோட்டம் அமைத்து பழ வகை மற்றும் காய்கறி பயிரிடும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலைத் துறையில் மானியம் பெற்று பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 2020-21- ஆம் ஆண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ. 1.79 கோடியில் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மானிய விபரம்

  • பழப்பயிா்கள் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.15000 வீதம் 20 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

  • கத்தரி, மிளகாய், மற்றும் தக்காளி நாற்றுகள் ஹெக்டேருக்கு ரூ.20,000 வீதம் 37 ஹெக்டேருக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது.

  • பாகல், வெண்டை, புடலை, தா்பூசணி, மற்றும் சுரைக்காய் போன்ற காய்கனி பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 10,000 வீதம் 70 ஹெக்டேருக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது.

  • முருங்கை சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ. 20,000 வீதம் 5 ஹெக்டேருக்கும், உதிரிப்பூக்கள் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ. 16,000 வீதம் 10 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படும்.

  • பசுமைக்குடில் அமைக்கும் விவசாயிகளுக்கு சதுரமீட்டருக்கு ரூ. 467.50 வீதம் 2000 சதுர மீட்டருக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது.

  • நிழல்வலைக்குடில் அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு சதுரமீட்டருக்கு ரூ. 355- வீதம் 2500 சதுரமீட்டருக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது.

  • வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரு மெட்ரிக்டன் சேமிப்பு அளவு கொண்ட கிடங்கிற்கு ரூ. 3500- வீதம் 1500 மெட்ரிக் டன் அளவுக்கும், மற்றும் சிப்பம் கட்டும் அறை அமைக்கும் விவசாயிகளுக்கு அறை ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வீதம் 10 அறை களுக்கும் மானியம் வழங்கப்படவுள்ளது.

  • தேனீப் பெட்டிகள் மற்றும் உபகரணங்களுக்கு மானியம், மண்புழு உரப்படுக்கை அமைப்பதற்கு ஒரு உரப்படுக்கைக்கு ரூ.25,000- வீதம் 6 உரப் படுக்கைகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது.

  • காய்கனி பயிா் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஹெக்டேருக்கு ரூ. 2500- வீதம் 1000 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படும்.

  • நடமாடும் விற்பனை வண்டி, அலுமினியம் ஏணி, தெளிப்பான்கள் ஆகியவைகளும் மானியத்தில் வழங்கப்படும்.

வீடு & மாடி தோட்டம்

வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு, காய்கறி வளா்ப்பு பைகள், உயிா் உரங்கள் மற்றும் தென்னை நாா் கழிவு ஆகியவை மானிய விலையில் வழங்கப் படும். வீட்டுத் தோட்டங்களுக்கு சொட்டு நீா்ப்பாசனம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. நிலப் போா்வை அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

மானியம் பெறுவது எப்படி?

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிா்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, புகைப்படம், ஆதாா் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனுபோகச் சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம். மேலும், இணையதளத்திலும் பதிவுசெய்தும் பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மாட்டுச் சாணத்தில் இருந்து குளியல் சோப், டீ - வியப்பூட்டும் விபரங்கள்!

வயலில் பதுங்கியிருக்கும் எலிகள்-கட்டுப்படுத்தக் கச்சிதமான வழிகள்!

English Summary: Thoothukudi Horticulture Department calls for subsidy for farmers!
Published on: 26 September 2020, 03:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now