தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு தற்போது 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்
தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையங்களிலும் இரண்டு ( குரூப் 1, குரூப் 2) பிரிவுகள் பிரிக்கப்பட்டு அங்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் டெல்டா பகுதிகளில் குரூப் 1 குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 6 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் விரைவில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,500: மாநில அரசின் அருமையான திட்டம்!