மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் மையங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிடும் விவசாயிகள் அல்லாதவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அனீஷ் சேகர் எச்சரித்துள்ளார்.
நெல் கொள்முதல் (Purchase of paddy)
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 2021-2022 ஆண்டில் குறுவை பருவத்தில் 25 நெல்கொள்முதலுக்காக சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டன.
இந்த மையங்கள் மூலம் இதுவரை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக 17 ஆயிரத்து 416 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டு
இந்நிலையில் பணம் பட்டுவாடா தாமதமாவதைச் சுட்டிகாட்டி விவசாயிகளிடம் நெல்லை குறைந்த விலைக்கு வாங்கி வியாபாரிகள் நெல் கொள்முதல் மையங்களில் விற்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆட்சியர் ஆலோசனை (Collector Advice)
இந்த முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கூறியதாவது:-
பதிவு அவசியம் (Registration is required)
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகள், தங்களைப்பற்றிய பின்வரும் விவரங்களைப் பதிவு செய்து, கொள்முதல் செய்யப்படும் தேதி அறிந்து கொள்ள வேண்டும்.
இணைக்க வேண்டியவை
-
பெயர்
-
பட்டா
-
சிட்டா
-
அடங்கல்
-
வங்கி கணக்கு எண்
-
ஆதார்
-
விவசாய நிலத்தின் புல எண்
-
விற்கப்பட்ட நெல் அளவு
-
இத்தனை விவரங்களையும் இணையத்தில் பதிவு செய்து, கொள்முதல் செய்யப்படும் தேதியை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 2022 சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய 42 மையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விலை நிர்ணயம் (Pricing)
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு கிரேடு ஏ(சன்னரகம்) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2060, கிரேடு சி (பொது ரகம்) குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2015 ம் அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த வசதியின் மூலம், வெளிநபர்கள், வியாபாரிகள் தலையீடு இன்றி விவசாயிகள் நெல்லை கொள்முதல் மையங்களில் விற்கலாம்.
குண்டர் சட்டம் (The law of thugs)
இதனிடையே வியாபாரிகள் சிலர் விவசாயிகளைத் திசைத்திருப்பி, குறைந்த விலைக்கு நெல்லை வாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறு வியாபாரிகளுக்கு நெல் விற்றது கண்டறியப்பட்டால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...