பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 September, 2024 10:50 AM IST
bio fertilizers uses method

உயிர் உரங்கள் மண்ணில் இடும்போது மண்வளத்தை பெருக்குவதுடன் மட்டுமல்லாது மண்ணில் பயிர்களால் கிரகிக்க இயலாத சத்துகளை தன்னுடைய உயிர்வினை ஆற்றல் முலமாக கிரகிக்கும் சத்துக்களாக குறிப்பாக தழை, மணி, சாம்பல் (N:P:K) மற்றும் துத்தநாகச் சத்தாக மாற்றி அளிக்கும் திறனுடைய நுண்ணுயிரிகளே உயிர் உரங்களாகும். இவற்றை நாம் ஆங்கிலத்தில் (BIO-FERTILIZERS) என்று அழைக்கிறோம்.

இந்நிலையில் உயிர் உரங்களை உபயோகப்படுத்தும் முறைகள் , அவற்றினை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது குறித்து அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் பல்வேறு தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

உயிர் உரங்களின் பெயர்கள்:

  1. அசோஸ்பைரில்லம் (நெல்)
  2. அசோஸ்பைரில்லம் (இதர பயிர்கள்)
  3. ரைசோபியம் (பயறுவகை)
  4. பாஸ்போ பாக்டீரியா
  5. பொட்டாஷ் பாக்டீரியா

உயிர் உரங்கள் பவுடர் (லிக்னைட் கரி திட வடிவிலும்), திரவ நிலையிலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. திட வடிவில் 200 கிராம் எடையுள்ள பொட்டலங்களாகவும், திரவ வடிவில் 100 மி.லி, 250 மி.லி , 500 மி.லி, மற்றும் ஒரு லிட்டர் கொள்ளளவிலும் கிடைக்கிறது. இதனுடைய வாழ்நாள் காலம் ஒரு வருடமாகும். விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் 25%, மற்றும் 50% மானியத்திலும் வழங்கப்படுகின்றன.

உயிர் உரங்களை உபயோகப்படுத்தும் முறைகள்:

1)விதையுடன் கலத்தல்:

விதை நேர்த்தியாக குறிப்பிட்ட பயிரில் (நெல் பயறுவகை) பரிந்துரைக்கப்பட்ட உயிர் உரத்துடன் ஆறிய வடித்த கஞ்சியுடன் கலந்து நிழலில் நன்றாக உலர்த்தி, 24 மணி நேரத்திற்கு பிறகு விதைக்க வேண்டும்.

2)நாற்றின் வேரில் நனைத்து நடுதல்:

100 மி.லி திரவ உயிர் உரத்திற்கு 15-20 லிட்டர் என்ற அளவில் தண்ணி கலந்து நாற்றின் வேர்கள்/ அல்லது கரும்பு கரணைகள் 15-20 நிமிடம் முக்கி/நனைத்து உடனடியாக நடுதல் வேண்டும்.

3)நேரிடையாக வயலில்/நிலத்தில் இடுதல்

ஏக்கருக்கு 1 லிட்டர் திரவ உயிர் உரங்கள் அல்லது 3 பாக்கெட் உயிர் உரங்களை நன்றாக மக்கிய சாண/தொழு உரத்துடன் கலந்து நன்றாக தண்ணீர் தெளித்து ஒரு நாள் இரவு வைத்திருந்து மறுநாள் நிலத்தில் இடலாம்.

சொட்டுநீர்பாசனம் மூலமாக அளிக்கப்படும் போது ஏக்கருக்கு 1.5-2 லிட்டர் திரவ உயிர் உரத்தை (LIQUID BIO FERTILIZERS) உரக்கலனில் ஊற்றி பாசன நீருடன் கலந்து கொடுக்கலாம்.

Read also: டிரெண்டாகும் அரக்கு காபி- எங்க விளையுது? என்ன சிறப்புனு தெரியுமா?

உயிர் உரங்கள்- உபயோகிப்பதன் நன்மைகள் விவரம்:

1)காற்றிலுள்ள நைட்ரஜன் (78%) வாயுவை மண்ணில் தழைசத்தாக (N) நிலை நிறுத்து பயிர்களுக்கு அளிக்க பயன்படுகிறது. அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்றவை தழைசத்தை கிரகிக்க உதவுகின்றன.

2) பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் மண்ணில் (நிலத்தில்) கிட்ட நிலையில் உள்ள மணிசத்தை எளிதில் நீரில் கரையும் மணிசத்தாக மாற்றி பயிர்களுக்கு அளிக்க பயன்படுகிறது.

  • பயிர்களால் மண்ணில் கிரகிக்க முடியாத நிலையில் சாம்பல் சத்தை கிரகித்து கொடுக்க கூடிய பொட்டாஷ் பாக்டீரியா, துத்தநாக பாக்டீரியா போன்றவைகளை நிலத்தில் இடும்போது அவைகள் அந்தந்த சத்துகளை மண்ணில் இருந்து பயிர்கள் எடுத்துக் கொள்ள உதவுகின்றன.
  • பயிர்களின் வேர்மண்டலத்தில் உள்ள இண்டோல் அசிட்டிக் அமிலம் (IAA) ஜிப்ரலின் மற்றும் சைட்டோகைனின் போன்ற பயிர் ஊக்கிகளையும் வைட்டமின் பி ஆகியவற்றினையும் உற்பத்தி செய்வதால், பயிரின் வேர்கள் நன்றாக கிளைத்து வளர உதவுகின்றன.
  • பரிந்துரைக்கப்பட்ட தழை மற்றும் மணிச்சத்து உரங்களில் உயிர் உரங்கள் இடுவதால் 20% உரங்கள் இடுவது குறையும்.
  • மண்ணில் உள்ள அங்கக பொருட்களை மக்கி செய்து மண்ணில் கரிம சத்தை அதிகரிக்க செய்து விளைச்சலை அதிகரிக்க உதவுகின்றன.
  • சுற்றுப்புற சூழல் பேணி மாசற்ற சூழலை உருவாக்க உதவுகின்றன.
  • குறைந்த அளவே தேவைபடுவதால் இவற்றை பயன்படுத்த ஆகும் செலவு மிக குறைவு

எனவே மண்வளத்தை காக்கவும் மனித நலத்தை பேணவும் குறைந்த செலவில் வாங்கிட கூடிய உயிர் உரங்களை பயன்படுத்தி தரமான விளைச்சலை பெற்று வளமாக வாழ்வோம் என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

(மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள்/ முரண்கள் இருப்பின் வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன் அவர்களை தொடர்புக் கொள்ளலாம். தொடர்பு எண்: 94435 70289)

Read more:

விவசாயிகளுக்கு உதவும் 5 வகையான உரமிடும் முறைகள்- முழு விவரம்!

இயற்கையின் அற்புத கொடை "பூஞ்சைகள்” - ஏன் தெரியுமா?

English Summary: Tips to Farmers for How to use bio fertilizers properly
Published on: 03 September 2024, 10:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now