சூரிய ஒளி (Solar light) மூலம் மின் வேலி (Power fence) அமைக்கும் திட்டத்திற்கு அரசு 50 சதவீதம் மானியம் வழங்குகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ள காஞ்சிபுரம், சிவகங்கை, கள்ளக்குறிச்சி ஆட்சியர்கள் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
விவசாய விளை நிலங்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் வேளாண் பொறியியல் துறை சூரிய ஒளி மூலம் மின் வேலி அமைக்கும் திட்டத்தினை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு அரசு தரப்பில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலி அமைப்பை 5 வரிசை (மீட்டருக்கு ரூ.250), 7 வரிசை (மீட்டருக்கு ரூ.350), 10 வரிசை (மீட்டருக்கு ரூ.450) தோ்வு செய்து கொள்ளலாம். தனிநபா் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 2 ஏக்கா் அல்லது 1245 மீட்டா் அமைக்க ரூ.2 லட்சத்து 18 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படும்.
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் எங்கு விண்ணப்பிக்கலாம்
சிங்கங்கை மாவட்டத்தின் இளையான்குடி, காளையாா்கோவில், மானாமதுரை, சிவகங்கை மற்றும் திருப்புவனம் வட்டார விவசாயிகள் சிவகங்கையில் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனை அருகே உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்திலும் தேவகோட்டை, கண்ணங்குடி, கல்லல், எஸ்.புதூா், சாக்கோட்டை மற்றும் திருப்பத்தூா் வட்டார விவசாயிகள் காரைக்குடி சூடாமணிபுரம், புகழேந்தி தெருவில் உள்ள உதவி செயற்பொறியாளா் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு அழைப்பு
இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் மூலமாக 50 சதவீத மானித்தில் சூரிய ஒளி மின் வேலி அமைக்கும் திட்டத்தில் விவசாயிகள் விண்ணப்பித்து பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட அட்சியர் பா.பொன்னையா கேட்டுக்கொண்டுள்ளார்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற ஆர்வமுடைய விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, "9003090440" என்ற கைப்பேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை- 35. கைப்பேசி "9443363967" என்ற எண்ணிற்கும் அல்லது அலுவலகங்களில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கை
கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் 50 சதவீத மானியத்துடன் கூடிய சூரிய ஒளி மின் வேலி அமைக்க விண்ணப்பிக்குமாறு கலெக்டர் கிரண்குராலா கேட்டுக்கொண்டுள்ளார்.
இத்திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் தாலுகா விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் (வேளாண்மை பொறியியல் துறை), 3, மஞ்சேஸ்வரா காம்ப்ளக்ஸ், வெட்ஸ் நகர், நீலமங்கலம் கூட்ரோடு, கள்ளக்குறிச்சி என்ற அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். மேலும் "04151-226370" என்ற போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அதேபோல் திருக்கோவிலுார் மற்றும் உளுந்துார்பேட்டை தாலுகா விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் (வேளாண்மை பொறியியல் துறை), 45/72, பெரியார் தெரு, என்.ஜி.ஜி.ஓ., நகர், திருக்கோவிலுார் என்ற அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம். மேலும் "04153-253333" என்ற போன் நம்பரிலும் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டுளாளர்.
இதே போன்று தமிழத்தின் ஆனைத்து மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் சூரிய ஒளி மின் வேலி திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
மேலும் படிக்க..
பாம்பாறு பாசன விவசாயிகளுக்கு முழு மானியத்தில் விவசாய இடுபொருள்கள் - வேளாண் துறை!
தமிழகத்தில் பருப்பு சாகுபடியை அதிகரிக்க வேளான் துறை திட்டம்!
TN Govt: வேளாண் பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க தடை!