நெல் பழ நோய் அஸ்டிலாஜீனாய்டியா வைரன்ஸ் என்னும் பூசணத்தால் உண்டாகிறது. சாதாரணமாக இந்நோய் நெற்கதிரின் ஒருசில நெல்மணிகளில் மட்டும் தென்படும். இந்நோய் பாதிக்கப்பட்ட நெல்மணிகள் மஞ்சள் நிறமாக மாறி, மிருதுவான பந்து போன்று 1 செ.மீ அளவுக்கு வளரும். நெல் மணிகள் முதிர்ச்சி அடையும் போது, மஞ்சள் நிறம் கரும் பச்சை நிறமாக மாறும். தற்போது, இந்நோய் வேகமாக பரவி கணிசமாக மகசூல் இழப்பை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இப்பூசணம் பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிர்களை எளிதாக தாக்கும் தன்மை கொண்டது. அதிகமான மழை மற்றும் காற்றில் அதிகமான ஈரப்பதம் ஆகியவை இந்நோய் பரவ சாதகமாக இருக்கின்றன. மண்ணில் அதிகமான தழைச்சத்து மற்றும் காற்று ஆகியவை இந்நோய் அருகில் உள்ள வயல்களுக்கு பரவ ஏதுவாக உள்ளது. மேலும், பின்பருவ பயிர்களில் இந்நோய் அதிகம் தென்படுகிறது.
இந்நோயை கீழ்கண்ட முறைகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும்
1. தடுப்பு முறைகள்
-
நெல் விதைகளை கார்பண்டசிம் என்ற பூசணக் கொல்லியை பயன்படுத்தி ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
-
பாதிக்கப்பட்ட நெல் மணிகளை நோயின் ஆரம்ப நிலையில் அழிக்க வேண்டும். இதனால், இந்நோய் அருகில் உள்ள நெற்பயிர்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தலாம்.
-
தழைச்சத்தை பிரித்து , இடைவெளி விட்டு இட வேண்டும்.
2 . உழவியில் முறைகள்
-
இந்நோய் அதிகமாக தாக்கும் இடங்களில், முன்பருவ நடவு செய்ய வேண்டும்.
-
பயிர்கள் ஈரமாக இருக்கும் பொழுது, வயல்களில் உரம் இடுதல் மற்றும் களை எடுத்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
-
அறுவடைக்கு முன்பு பழ நோய் பாதிக்கப்பட்ட மணிகளை பிhpத்து எடுத்து அழிப்பதன் மூலம் அடுத்தப் பருவத்திற்கு வயலில் நோயின் தீவிரமாவதை தடுக்க முடியும்.
3. இரசாயன முறைகள்
நெற்பயிர் புடைப் பருவத்தில் இருக்கும் போது ஒரு முறையும், 50% பூக்கும் பருவத்தில் இருக்கும் போது ஒருமுறையும் கீழ்கண்ட ஏதாவது ஒரு பூசணக் கொல்லியை தௌpப்பதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
பிராப்பிகனாசோல் 25 ஈ. சி எக்டருக்கு 500 மிலி (அல்லது) காப்பர் ஹைட்ராக்ஸைடு 77 டபிள்யூ.பி. எக்டருக்கு1.25 கிலோ