தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் புதுமைத் தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ஆராய்ச்சியில் முன்னோடியாகத் திகழ்வதாக, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுத் துணைத்தலைவர் சி.பொன்னையன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
TNAUவிற்கு வருகை (Visit to TNAU)
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு வழங்கிய 50 கோடிக்கான தமிழ்நாடு புதுமைத் தொழில்நுட்ப முன்னேற்றத் திட்டத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதலுக்காக முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத்தலைவருமான சி. பொன்னையன், கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மையைப் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தார்.
நேரில் பார்வையிட்டார் (Visited in person)
அவரை, பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் நீ. குமார் வரவேற்று பல்வேறு துறைகளின் அதிநவீன ஆய்வகம் மற்றும் புதுமைத் திட்டத்தின் நடைமுறை செயல்பாடுகளை காண்பித்து விளக்கினார்.
இவ்வருகையின் சிறப்பம்சமாக நானோ தொழில்நுட்ப ஆய்வகம், பயிர் பின் செய் நேர்த்தி மற்றும் மதிப்புக் கூட்டுதல் ஆய்வகம், அதிநவீன பூச்சி அருங்காட்சியம், தென்னை திசு வளர்ச்சி ஆய்வகம், அங்கக இடுப்பொருட்கள் கண்காட்சி, தீவனப் பயிர்கள் உருண்டைகள் தயாரிப்பு, உள்ளிட்டவற்றை மேற்பார்வையிட்டு தமிழ்நாடு விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி ஈடுபாட்டைப் பாராட்டினார்.
இந்த சந்திப்பின்போது பேசிய துணைத்தவலைர் சி.பொன்னையன், ஆராய்ச்சி உற்பத்தி திறன் மேம்பட வேளாண் விஞ்ஞானிகளின் பணி இன்றியமையாதது என்றும், தமிழக அரசும் வேளாண் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பங்களிக்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
உணவுப்பொருட்களில் கலப்படத்தைக் கண்டறிவது எப்படி? எளிய டிப்ஸ்!
தோட்டக்கலை துறை விவசாயிகளுக்கு 35 கோடி ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டது!
ரேஷன் கடையில் பனங்கருப்பட்டி வழங்க பரிசீலனை! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!