தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நெல் வயலில் உரமிடும் மற்றும் களை எடுக்கும் இயந்திர வடிவமைப்புக்கான தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளது. இந்த காப்புரிமையானது காப்புரிமைகள், வடிவமைப்பு மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், காப்புரிமை அலுவலகம், இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாக TNAU சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரமிடும் மற்றும் களை எடுக்கும் இயந்திரம் நெல் வயல்களில் உரமிடுதல் மற்றும் களையெடுத்தல் ஆகிய இரண்டின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து செய்யுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது வடிமைக்கப்பட்ட உரமிடும் மற்றும் களை எடுக்கும் இயந்திரம் உரகொள்கலன், கட்டுப்படுத்தப்பட்ட திறப்பு, உரமிடும் வட்டு மற்றும் ஆற்றல் பரிமாற்ற அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இயந்திரத்தின் செயல்பாடு விவரம்:
உரம் கொள்கலனில் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட திறப்பு வழியாக உரம் உரமிடும் வட்டின் மேல் விழுமாறு அமைக்கப்பட்டுள்ளது. உரமிடும் வட்டின் சுழற்சி மற்றும் மையவிலக்கு விசையின் காரணமாக உரமானது 3 மீ அகலத்தில் பரப்பப்படுகிறது. இவ்வியந்திரத்தில் இரண்டு பற்சக்கர பெட்டிகள் ஒன்று களையெடுக்கும் கருவிக்கும் மற்றொன்று உரமிடும் வட்டிற்கும் ஆற்றலை கடத்த மற்றும் அவற்றை இயக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உருவாக்கப்பட்ட இயந்திரமானது ஒரே நேரத்தில் நெல் வயலில் களையெடுப்பு மற்றும் உரமிடுதல் வேலைகளை செய்வதால் சிறிய பண்ணைகளின் இயந்திரமயமாக்கலில் பயனுள்ளதாக இருக்கும் எனவும் TNAU சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்கள் நெல் வயலில் உரமிடும் மற்றும் களை எடுக்கும் இயந்திர வடிவமைப்புக்கான காப்புரிமை பெற்ற மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை கடந்த (ஏப்ரல் 24 ஆம் தேதி) முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் முனைவர் நா. செந்தில் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மையர் முனைவர் அ. ரவிராஜ் ஆகியோர் முன்னிலையில் காப்புரிமை சான்றிதழை வழங்கி கௌரவித்தார்.
Molinsecto-AI: மென்பொருள் பதிப்புரிமை:
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் “Molinsecto-AI” என்ற கணினி மென்பொருள் உருவாக்கியத்திற்கான பதிப்புரிமையை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. Molinsecto-Al- வேளாண்மை விஞ்ஞானத்தில் ஒரு அற்புதமான கண்டுபிடிப்புப்பாகும். உயிரித்தகவியில் வல்லுநர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மென்பெருள் பூச்சிக்கொல்லிகளின் பண்புகளை மிகத் துல்லியமாக கண்டறிய உதவும். இயந்திர கற்றல் மூலம் இயங்கும் இம்மென்பொருள் பைதான் நிரலாகத்தைக் கொண்டு எழுதப்பட்டதாகும்.
தாவரத்தில் உள்ள மூலக்கூறுகளுக்கு பூச்சிக்கொல்லி ஆற்றலை/தன்மையை கண்டறிய இம்மென்பொருள் உதவுகிறது. Molinsecto-Al பூச்சிகளுக்கு எதிரான ரசாயன சேர்மங்களின் செயல்திறனை விரைவாக மதிப்பிடுவதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
மேலும் பாதுகாப்பான மற்றும் நிலையான பூச்சி மேலாண்மைக்கு வழிவகுக்கும் ஆராய்ச்சிகளை துரிதப்படுத்துகிறது. இம்மென்பொருள் பயனாளிகளுக்கு எளிய முறையில் பயன்படுத்த வழிவகுக்கிறது. நிலையான வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பான தேடலில் Molinsecto-Al ஒரு திருப்புமுனையாக அமையும் எனவும் TNAU சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Read more:
கோடை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தில் முன்னுரிமை!