Farm Info

Tuesday, 16 March 2021 12:10 PM , by: Elavarse Sivakumar

தென்னையில் நோயின் தீவிரத்தைக் குறைக்க வாழையை ஊடுபயிராகப் பயிரிடலாம் என வேளாண்துறையினர் யோசனை தெரிவித்துள்ளனர்.

தென்னை சாகுபடி (Coconut cultivation)

திருப்பூர் மாவட்டத்தில், 2 லட்சம் ஏக்கரில், தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்குள்ள தென்னை மரங்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறது. இதனைத் தவிர்க்க, பல்வேறு ஆலோசனைகளை வேளாண்துறை வழங்கி வருகிறது.

இது குறித்து பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய பயிர் பாதுகாப்பு விஞ்ஞானி கவிதா கூறுகையில்,

முக்கிய நோய்கள் (Major diseases)

குருத்து அழுகல், சாறு வடிதல், அடித்தண்டு அழுகல் இலைப்புள்ளி, வேர் வாடல் நோய் ஆகியவை, தென்னையைத் தாக்கும் முக்கியமான நோய்கள் ஆகும்.

பாதிக்கப்படும் நிலை (Vulnerability)

இளம் கன்றுகள் முதல், 10- வயது மரங்கள் வரை இந்நோயால் பாதிக்கப்படுகின்றன.

காரணங்கள் (Reasons)

மண்ணில் இருக்கும் ஈரப்பதம், குளிர்ச்சியான சூழ்நிலை உள்ளிட்டவற்றால் இந்நோய் உருவாகிறது.

எவ்வாறு பாதிக்கப்படும் (How to effect)

முதலில், நடுக்குருத்து பாதிக்கப்பட்டு, பின்
அடிப்பகுதி அழுகி விடும்.

நோயைத் தீர்க்க வழிகள் (Ways to cure the disease)

  • குருத்தை கையோடு இழுத்தால், அது எளிதாக வந்துவிடும்.

  • இந்நோயைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட பகுதியை வெட்டி எடுத்துவிட வேண்டும்.

  • அப்பகுதியில், 5 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு (Copper Oxy Chloride) மருந்தைத் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.

  • தஞ்சாவூர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, மூன்று அடி உயரத்தில் சாறு வடியும்.

  • சாறு வடிந்த மரத்தின் தண்டுப்பகுதியை வெட்டி பார்த்தால் அழுகி நிறம் மாறியிருக்கும்.

  • மரத்தின் இலைகள்(Leaves), மஞ்சள் (Yellow)நிறமாக மாறி பின், காய்ந்து மரத்தோடு ஒட்டி தாங்கும்.

இறக்க வாய்ப்பு (Chance of dying)

மரத்தின் அடிப்பகுதியில் காளான் போன்ற வளர்ச்சி காணப்படும் பாதிக்கப்பட்ட மரம், ஆறு மாதம் முதல், ஓராண்டிற்குள் இறந்து விடும்.

ஊடுபயிராக வாழை (Banana as Intercrop)

  • வாழையை ஊடுபயிர் செய்வதன் மூலம், நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். மரத்தைச் சுற்றி வட்ட வடிவில் பாத்தி அமைத்து தனித்தனியே நீர் பாய்ச்ச வேண்டும்.

  • வேப்பம் புண்ணாக்கு, ஒரு மரத்திற்கு, ஐந்து கிலோ இடவேண்டும்.

  • காப்பர் ஆக்சி குளோரைடு, 5 கிராம் அளவுக்கு, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மரத்தைச் சுற்றி ஊற்ற வேண்டும்.

  • கூடுதல் விபரங்களுக்கு 04265-296155 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியம்!

வெயிலின் தாக்கத்தால் 1000 ஏக்கர் பயிர்கள் கருகும் அபாயம்! தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!

பயிர்கள் செழிக்க கோடை உழவு அவசியம் - விவசாயிகளுக்கு ஆலோசனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)