Farm Info

Friday, 07 January 2022 04:10 PM , by: Deiva Bindhiya

To start beekeeping Startup

இப்போதெல்லாம் எல்லோரும் சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறார்கள். அந்த வகையில், உங்கள் சொந்த தொழிலைத் தொடங்க அரசு உங்களை ஊக்குவிக்கிறது.

அரசு உதவியுடன் உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்குவது எப்படி? (How To Start Your Own Business With Government Aid?)

புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் பெரும் மானியம் வழங்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், தேனீ வளர்ப்பு தற்போது ட்ரண்டிங்கில் உள்ளது. அதன் சர்வதேச தேவையும் அதிகரித்து வருகிறது. எனவே தேனீ வளர்ப்பு தொழிலை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிந்து கொள்வோம்.

இந்தியாவில் தேனீ வளர்ப்பு மானியம் (Beekeeping subsidy in India)

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் கால்நடை வளர்ப்புத் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. இதை தொடர்ந்து, மேலும் கால்நடை தொழில் வளர்ச்சியடைய மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முக்கிய திட்டங்களை கொண்டு வருகின்றன. அதே நேரம் விவசாயிகளை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு இதில் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. எனவே, ஹரியானா அரசு, மாநிலம் முழுவதும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க தேனீ வளர்ப்புக்கான மானியத்தை அதிகரித்துள்ளது.

ஆரம்பநிலைக்கு தேனீ வளர்ப்பு (Beekeeping Subsidy in India)

ஹரியானாவில் தேனீ வளர்ப்புக்கான மானியம் 45 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக, தேனீ வளர்ப்புக்கு (மதுமக்கி பலன்) 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 45 சதவீதம் அதிகரித்து 85 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.

தேனீ வளர்ப்பு மற்றும் ஊக்கத்தொகை விவரம் (Details of beekeeping and incentives)

தோட்டக்கலைத் துறை விரைவில் வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் கீழ், விவசாயிகள், தோட்டக்காரர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் தேனீ வளர்ப்பு தொழிலை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள்.

தேனீ வளர்ப்புக்கு மானியம் பெறுவது எப்படி (How to get subsidy for beekeeping)

தோட்டக்கலைத் துறையின்படி, அரசுத் திட்டங்களில் உயர்த்தப்பட்ட மானியத் தொகையைப் பயன்படுத்திக் கொள்ள, விவசாயிகள், தோட்டக்காரர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் தோட்டக்கலை அலுவலர்கள் அல்லது ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பாளர்கள், மேம்பாட்டு மைய ராம்நகர், குருக்ஷேத்ரா துணை இயக்குநர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். அதன் பிறகு நீங்கள் விண்ணப்பித்து திட்டங்களில் பயன்பெறலாம்.

தேனீ வளர்ப்பு பெட்டியை நிர்வாகம் வழங்கும் (Department will provide beekeeping box)

இதில் சிறப்பு என்னவென்றால், விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்புக்கான பெட்டிகள் வழங்கப்படும். மேலும் தேனீ பெட்டியில் 50 முதல் 60 ஆயிரம் தேனீக்கள் வரை வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து 1 குவிண்டால் வரை தேன் உற்பத்தி கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.

தரம் மற்றும் விளைச்சலை அதிகரிக்க உதவும் தேனீ (Bees help to increase the quality and yield)

மாநிலத்தில் தேனீ வளர்ப்பை ஊக்குவிப்பது மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களின் தரத்தையும் விளைச்சலையும் அதிகரிக்கும். பல விவசாயிகள் தேனீ வளர்ப்பவர்களை தங்கள் வயல்களுக்கு அருகில் தேனீ பெட்டிகளை வைக்க அனுமதிப்பதில்லை, ஏனெனில் தேனீக்கள் தங்கள் பயிர்களை எல்லாம் தின்றுவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

ஆனால் தேனீக்களால் பயிர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதுதான் உண்மை. அதேசமயம் தேனீக்கள் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கின்றன. தேனீ பயிர்களின் மிகப்பெரிய நண்பனாகும். தேனீ மகரந்தச் சேர்க்கையால் 1 ஏக்கர், கடுகில் 3 முதல் 4 குவிண்டால் வரை மகசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கடுகு எண்ணெயில் உள்ள கந்தகத்தின் அளவு 10 சதவீதம் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க:

MPKSY: முற்போக்கு விவசாயிகளை கவுரவித்து ரூ.60 லட்சம் மதிப்பில்லான விருது!

வெப்பமண்டல பகுதியில் ஆப்பிள் விளைச்சல் சாத்தியம்: அறிந்திடுங்கள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)