மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 November, 2021 11:20 AM IST
Tomato Price Today

நாட்டின் பல பகுதிகளில் தக்காளி விலை சதத்தை எட்டியுள்ளது. பல்வேறு நகரங்களில் இதன் விலை கிலோ 110 முதல் 160 ரூபாய் வரை எட்டியுள்ளது. இந்த பணவீக்கம் விவசாயிகளால் அதிகரித்து வருவதாக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் உண்மை அல்ல. உண்மையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், விவசாயிகளுக்கு சராசரியாக கிலோ ஒன்றுக்கு 20 முதல் 50 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. 90, 100 ரூபாய் ரேட் இருக்கும் சில ஏரியாக்கள்தான் உள்ளது. வெள்ள-மழை வாய்ப்பை விவசாயிகள் குறைவாகவும், இடைத்தரகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அதிகமாகவும் பயன்படுத்தி சம்பாதிக்கின்றனர்.

இந்தியாவில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலம் ஆந்திரா. இங்கு மழையால் தக்காளி பயிர் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக தேவைக்கும் வழங்கலுக்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டு விலை ஏற்றம் காட்டத் தொடங்கியது. நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் தக்காளி விலை கிலோ ரூ.160 ஆக உள்ளது. இங்குள்ள கோயம்பேடு, மந்தவெளி, நந்தனம் சில்லறை விற்பனை சந்தையில் இந்த விலை உயர்ந்துள்ளது.

ஏன் விலை உயர்ந்தது?- Why is it so expensive?

நாட்டிலேயே ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தக்காளி அதிகம் விளைகிறது. ஆந்திராவில் 58 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் சுமார் 27 லட்சம் மெட்ரிக் டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. ஆந்திராவில், சித்தூர் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் இதன் அதிகபட்ச உற்பத்தி செய்யப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, சித்தூர் மற்றும் அனந்தபூர் மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

சித்தூரில் உள்ள மதனப்பள்ளி ( Andhra pradesh) தக்காளியின் மிகப்பெரிய சந்தையாகும். மத்திய அரசின் ஆன்லைன் சந்தையான இ-நாம் கணக்கின்படி, இங்கு தக்காளி குறைந்தபட்ச விலை ரூ.1,600 ஆகவும், அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.9,500 ஆகவும் உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தக்காளிக்கு பெரிய மார்க்கெட் உள்ளது. இது தவிர புனே அதன் முக்கியமான பகுதியும் கூட. விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு 40-50 ரூபாய் வரை கிடைக்கும்.

மொத்த சந்தையில் அதிக விலை எங்கே?- Where is the highest price in the wholesale market?

நவம்பர் 22ஆம் தேதி, சித்தூர் மாவட்டம் குர்ரம் கொண்டாவில் தக்காளியின் அதிகபட்ச விலை குவிண்டாலுக்கு ரூ.10,800-ஐ எட்டியது. அதாவது, இங்கு மொத்த விற்பனை விலை கிலோ ரூ.108. இருப்பினும், ஒடிசாவின் சுந்தர்காரில் அமைந்துள்ள போனையில் அதிகபட்ச விலை ரூ.2000 மட்டுமே. அதேசமயம் இமாச்சலத்தின் காங்க்ரா மற்றும் சம்பாவில் குவிண்டால் ஒன்றுக்கு 7,000 ரூபாய். அதேசமயம் டெல்லியின் ஆசாத்பூர் மண்டியில் தக்காளியின் குறைந்தபட்ச விலை ரூ.24 ஆகவும், அதிகபட்சமாக கிலோ ரூ.72 ஆகவும் உள்ளது.

விவசாயிகள் தலைவர்கள் கருத்துக்கள்- Comments from Farmers Leaders

அகில இந்திய காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராம் காட்கில், ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் மகாராஷ்டிராவில் பெய்த கனமழையால், பயிர் சேதமடைந்துள்ளதாக டிவி-9 க்கு தெரிவித்தார். இதனால் தற்போது விலை ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது மகாராஷ்டிராவில் 20 கிலோ தக்காளியை விவசாயிகள் 800 முதல் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகளின் கடின உழைப்பின் அதிகபட்ச பலனை இடைத்தரகர்களும் சில்லறை விற்பனையாளர்களும் அறுவடை செய்கின்றனர் என்று காட்கில் கூறினார்.

மேலும் படிக்க:

4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

பிரியாணிக்குத் தக்காளி இலவசம்- விபரம் உள்ளே!

English Summary: Tomato Price: Who Benefits? Intermediaries or farmers?
Published on: 24 November 2021, 11:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now