
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் வேளாண் தொடுதிரை மையம் (Agricultural Touchscreen Center) செயல்பட்டு வருகிறது.
பயன்படுத்தும் முறை:
வேளாண் தொடுதிரையை செயல்படுத்த தொடங்கியவுடன் கீரைகள், தானியங்கள் (Cereals), பணப்பயிர்கள், பயறு வகைகள், காய்கள், மலர்கள் உள்ளிட்டவற்றின் பெயர்கள் வருகின்றன. பின்னர் அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்தவுடன் அவற்றில் உள்ள வகைகள் குறித்த விவரங்கள் வெளியாகின்றன. உதாரணமாக, கீரையை தேர்வு செய்தால் அதில் சிறுகீரை, பசலைக்கீரை, அகத்திக்கீரை, லெச்சகெட்டான் கீரை, கொத்தமல்லி கீரை, பாலக்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, பருப்புக்கீரை, புதினா (Mint), கருவேப்பிலை போன்ற கீரைகளின் வகைகள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு கீரையை தேர்வு செய்தால் அந்த கீரையை பயிர் (Crop) செய்ய எவ்வளவு நிலம் தேவைப்படும், அந்த இடத்தில் எவ்வாறு பயிர் செய்வது, நோய்கள் தாக்காமல் பாதுகாக்க என்னென்ன செய்ய வேண்டும், எவ்வாறு பராமரிப்பது (maintain), எத்தனை நாட்களில் அறுவடை (Harvest) செய்வது போன்ற தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
650 விவசாயிகள் உறுப்பினர்கள்:
தானியங்கள், பயறு வகைகள், காய்கள் உள்ளிட்டவை குறித்தும், அவற்றை பராமரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 17 அமைப்புகளை சேர்ந்த 650 விவசாயிகள் உறுப்பினர்களாக (members) உள்ளனர். அவர்களுக்கு விவசாயத்தில் ஏற்படும் சந்தேகங்களை (Doubts) தெளிவுபடுத்துவதற்காக இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
முக்கிய நோக்கம்:
விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயம் குறித்த பொது தகவல்கள், வங்கியில் கடன் (Loan) பெறும் முறைகள் குறித்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து விவசாயத்தை லாபகரமாக செய்வதற்கே இந்த மையம் செயல்பட்டு வருகின்றது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க