Farm Info

Sunday, 07 August 2022 07:01 PM , by: Elavarse Sivakumar

மத்திய அரசின் டிராக்டர் யோஜனாத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானிய உதவி வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

tractor yojana

இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நலனுக்காகப் பலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டம் போன்று, விவசாயிகள் டிராக்டர் வாங்க உதவும் வகையில், டிராக்டர் யோஜனாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் டிராக்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.

மானிய உதவி

விவசாயிகளுக்கு மிகவும் பயனிக்கும் மற்றொரு திட்டம்தான் டிராக்டர் மானியத் திட்டம். 'பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா' என்ற இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன. டிராக்டருக்கான எஞ்சிய தொகையை மத்திய அரசே வழங்குகிறது. மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில அரசுகளும் டிராக்டர் வாங்க மானிய உதவி வழங்குகின்றன.

தகுதி

  • 18 முதல் 60 வயது வரையில் இருக்கும் இந்திய குடிமகன்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மிக முக்கியமாக விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

  • டிராக்டர் வாங்குபவரின் பெயரில் சொந்தமாக விவசாய நிலம் இருக்க வேண்டும்.

  • அதேபோல, வேறு மானியத் திட்டங்களில் உதவி பெற்றவராக இருக்கக் கூடாது.

  • முக்கியமான நிபந்தனை என்னவென்றால், விண்ணப்பதாரர் கடந்த ஏழு ஆண்டுகளில் இதேபோல டிராக்டர் எதையும் வாங்கியிருக்கக் கூடாது.

அமோக வரவேற்பு

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் மூலம் டிராக்டர்களை வாடகைக்கு எடுக்கும் சிரமம் குறைந்துள்ளதால் விவசாயிகளிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க...

100 ரூபாய் எடுத்தவருக்கு ரூ.2700 கோடி கிடைத்ததாக வந்த வங்கி SMS!!

சைக்கிள் எஸ்ஐ-ஒன்றல்ல, இரண்டல்ல, 22 ஆண்டுகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)