வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் தொடர்பாக ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி – திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியீடு.
தொழிற்துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு திறன்களை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் திருச்சி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் “ வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்க பயிற்சி ” வழங்க உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் : (TNSDC)
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் என்பது மாநிலத்தின் திறன் பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள், தொழில் நிறுவனக் கூட்டமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள், துறை திறன் குழுமங்கள், மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தான், திருச்சி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை – தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் தொடர்பான பயிற்சியினை வழங்க உள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதுதொடர்பான விவரங்கள் பின்வருமாறு:
“வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு சேவை வழங்குனர் “ என்ற பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சியானது , திருச்சி உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை , அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடைபெற உள்ளது .இந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயது உடைய எஸ்.எஸ்.எல்.சி, ஐடிஐ ,ஏதேனும் ஒரு துறையில் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்ற ஊரக இளைஞர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் அலுவலகம் , அரசு இயந்திரக் கலப்பை பணிமனை , வேளாண்மை பொறியியல் துறை ,எண்: 20 வ.உ.சி.சாலை , கண்டோன்மெண்ட், திருச்சி-620001 என்ற முகவரிக்கு கீழ்க்காணும் விபரங்களுடன் நேரில் பதிவு செய்யலாம்.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
- ஆதார் அட்டை, ( நகல் )
- கல்விட் தகுதி சான்றிதழ், ( நகல் )
- வங்கி கணக்கு ( நகல்)
நேரில் வர இயலாத இளைஞர்கள், WWW.tnskill.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
மேலும் இது தொடர்பான சந்தேகம் மற்றும் இதர விபரங்களுக்கு 97915-40901, 98424-765776, 80568-41434 என்கிற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
இந்திய விவசாயிகளுக்கு 5G இணையம் எவ்வாறு பயனளிக்கும்? - தெரிந்துகொள்ளுங்கள்