Farm Info

Thursday, 05 December 2019 01:29 PM , by: Anitha Jegadeesan

விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கிராமப்புறங்களில் தொடர்ந்து செயல் படுத்தப் படுகின்றன. அந்த வகையில் செங்கோட்டை வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ‘வயல் வெளிப்பள்ளி’ (Farmers Field day) எனும் திட்டதின் கீழ் நெல் சாகுபடி செய்யும் முறையை மேம்படுத்துவதற்காக பயிற்சிகள் வழங்கப் பட்டன.

வாரம் ஒரு முறை நடை பெற உள்ள பயிற்சி வகுப்பில், முதலாவதாக விவசாயிகளுக்கு நெல் சாகுபடியில் உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வேளாண் துறை சார்ந்த வல்லுநர்கள் பலரும் கலந்து கொள்வார்கள். முதல் வார பயிற்சியில் செங்கோட்டை வட்டார துணை வேளாண் அலுவலர்,  வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் துணை உதவி பேராசிரியர், உதவி வேளாண் அலுவலர்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

உயிர் உர விதை நேர்த்தி

உயிர் உரங்கள் மூலம் விதை நேர்த்தி செய்வதினால் தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைப்பதுடன், நன்மை பயக்கும் பாக்டீரியாக்களுக்கள் உருவாகின்றன. உயிர் உரங்கள் மண்ணை பாதிக்கும் எந்த இரசாயன பொருட்களையும் கொண்டிருக்காது.

தயாரிக்கும் முறை

உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், அசிட்டோபேக்டர் மற்றும் சூடோமோனாஸ் (600 கிராம்/எக்டர்) போன்றவற்றை அரிசி கஞ்சியில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். நல்ல சுத்தமான தரையில் முளைகட்டிய நெல் விதைகளை பரப்பி, அதன் மீது உயிர் உர கூழ்மத்தை சேர்த்து நன்கு கலந்து நிழலில் 30 நிமிடங்கள் உலர்த்தி விதைக்க வேண்டும்.அதன் பின் விதைகளை 30 நிமிடங்கள் நல்ல சூரிய ஒளியில் உலர வைத்து, பின் விதைத்தல் நெல்லின் முளைப்பு திறன் அதிகரிப்பதுடன் நாற்றுகளின் வீரியம் அதிகரிக்கும்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)