மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 June, 2020 6:31 PM IST
Image credit by: News leam

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் 2020-21 சந்தைப் பருவத்துக்கு அனைத்து கட்டாய காரீஃப் பயிர்களுக்குமான (Karif crops) குறைந்தபட்ச ஆதார விலைகளை (MSPs) அதிகரிக்க அனுமதி அளித்துள்ளது.

வேளாண் பயிர்களைப் பயிர் செய்தவர்களுக்கு சரியான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசு 2020-21 சந்தைப் பருவத்துக்கான காரீஃப் பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலைகளை அதிகரித்துள்ளது. 

குறந்தபட்ச ஆதரவு விலையில் அதிகபட்ச அதிகரிப்பு என்பது நைஜர் விதைக்கு (Nigerseed) ஒரு குவிண்டாலுக்கு ரூ.755 என முன்மொழியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எள் (Sesamum) ஒரு குவிண்டாலுக்கு ரூ.370, உளுந்து ஒரு குவிண்டாலுக்கு ரூ. 300)என உயர்த்தப்பட்டுள்ளது.

2020-21 சந்தைப் பருவத்துக்கான அனைத்து காரீஃப் பயிர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை:
 

எண்

பயிர்கள்

முன்கணிப்புச் செலவு

 

குறைந்தபட்ச ஆதார விலை 

(2020-21)

MSP அதிகரிப்பு

1

நெல் (பொதுரகம்)
Paddy (Common)

1,245

1,868

53

 

2

நெல் (தரம் ஏ)^
Paddy (Grade A)^

-

1,888

53

 

3

வெள்ளைச் சோளம்(கலப்பினம்)
Jowar (Hybrid)

1,746

2,620

70

 

4

வெள்ளைச் சோளம் (மால்தண்டி)^
Jowar (Maldandi)^

-

2,640

70

 

5

கம்பு (Bajra)

1,175

2,150

150

 

6

கேழ்வரகு (Ragi)

2,194

3,295

145

 

7

மக்காச்சோளம் (Maize)

1,213

1,850

90

 

8

துவரம் பருப்பு(ஆர்கார்)
Tur (Arhar)

3,796

6,000

200

 

9

பச்சைப்பயிர்
Moong

4,797

7,196

146

 

10

உளுந்து
(Urad)

3,660

6,000

300

 

11

மணிலா
(Groundnut)

3,515

5,275

185

 

12

சூரியகாந்தி விதை
(Sunflower Seed)

3,921

5,885

235

 

13

சோயாபீன்ஸ் (மஞ்சள்)
Soybean (yellow)

2,587

3,880

170

 

14

எள்
Sesamum

4,570

6,855

370

 

15

நைஜர் விதை
Nigerseed

4,462

6,695

755

 

16

பருத்தி (நடுத்தர இழை)
Cotton (Medium Staple)

3,676

5,515

260

 

17

பருத்தி (நீண்ட இழை)^
Cotton (Long Staple)^

-

5,825

275

 

ஊரடங்கு காலகட்டமான 24-3-2020 முதல் இன்று வரை பிரதம மந்திரியின் கிஸான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் (PM-KISAN) 8.89 கோடி விவசாயக் குடும்பங்கள் பலன் அடைந்துள்ளன.  இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 17,793 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 நோய்த்தொற்று காலகட்டத்தில் நிலவுகின்ற இந்த நெருக்கடியான சூழலில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பிரதம மந்திரி கரீஃப் கல்யாண் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு பருப்புகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 1,07,077.85 மெட்ரிக் டன் பருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.. 

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடி சலுகை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நூறு நாள் வேலைத் திட்டம் : கூலியை நேரடியாகச் சென்று வழங்க வேண்டும் - முதல்வர் உத்தரவு!

English Summary: Union Cabinet ministry hikes MSP of 14 Kharif crops to increase farmers income
Published on: 02 June 2020, 01:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now