Farm Info

Thursday, 19 November 2020 04:24 PM , by: Daisy Rose Mary

Credit : Dinamalar

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு வகைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 50% வரை மானியம் வழங்கப்படுகிறது.

பயறு உற்பத்திக்கு மானியம் 

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, பச்சைப் பயறு மற்றும் கொண்டைக் கடலை ஆகிய பயிர்களை உற்பத்தி செய்ய எக்டர் ஒன்றுக்கு 7500 வழங்கப்படுகிறது.நிலக்கடலையை தொடர்ந்து உளுந்து பயிர் செய்வதற்கு எக்டர் ஒன்றுக்கு 15000 வழங்கப்படுகிறது. நிலக்கடலையுடன் ஊடு பயிர் உற்பத்தி செய்யவதற்கு எக்டர் ஒன்றுக்கு 9000 வழங்கப்படுகிறது. மேலும் விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதாவது 10 ஆண்டுகளுக்குட்பட்ட துவரை, உளுந்து, பச்சைப் பயிறு போன்ற உயர் விளைச்சல் ரக சான்று விதைகளுக்கு 50 சதவீத மானியம் அதிபட்சமாக கிலோ ஒன்றுக்கு 50 மானியம் வழங்கப்படும்.

10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, தட்டைப் பயிறு மற்றும் கொள்ளு போன்ற உயர் விளைச்சல் ரக சான்று விதைகளுக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு 25 வழங்கப்படும். உற்பத்தி மானியமாக, 10 ஆண்டுகளுக்குட்பட்ட துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, தட்டைப் பயிறு ரகங்களுக்கு சான்று விதை உற்பத்திக்காக 50 சதவீத மானியம் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு 25 வழங்கப்படும்.

மேலும் நூண்ணூட்ட உரக்கலவை வாங்க 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டர் ஒன்றுக்கு 500 வழங்கப்படும். உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டர் ஒன்றுக்கு 300 வழங்கப்படும். ஜிப்சத்துக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டர் ஒன்றுக்கு 750 வழங்கப்படும். பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டர் ஒன்றுக்கு 500 வழங்கப்படும். சுழல் கலப்பை பெற இயந்திரம் ஒன்றுக்கு 34,000 அல்லது 40 சதவீத மானியம் இதில் எது குறைவோ அவை வழங்கப்படும்.

இயத்திரங்களுக்கான மானியம்

சிறு, குறு பெண் விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு இயந்திரம் ஒன்றுக்கு 42,000 அல்லது 50 சதவீத மானியம் இதில் எது குறைவோ அவை வழங்கப்படும். விசைத் தெளிப்பான்களுக்கு 40 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக 3000 வழங்கப்படும். கிணறு உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் இருந்து வயலுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் பிவிசி குழாய்களுக்கு மீட்டர் ஒன்றுக்கு 35 அல்லது 50 சதவீத மானியம் அதிகபட்சமாக பயனாளி ஒருவருக்கு 15000 வழங்கப்படும்.

மேலும் படிக்க

தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி....நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட அதிகம்!!

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்!!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)