வேளாண்துறை பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வேர்க்கடலை, பயறு வகை, சிறுதானியம், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை (Incentive for Farmers)
புதுவை வேளாண்துறை கூடுதல் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண்துறை பயிர் உற்பத்தி தொழில்நுட்ப திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வேர்க்கடலை, பயறு வகை, சிறுதானியம், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
வேர்க்கடலை, சிறுதானியம் பயிர் செய்த பொதுப்பிரிவு விவசாயிக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.6 ஆயிரம் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பயிறு வகைகளுக்கு பொதுப்பிரிவு ரூ.2 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.3 ஆயிரம், பருத்தி பொதுப் பிரிவுக்கு ரூ.10 ஆயிரம், அட்டவணை பிரிவுக்கு ரூ.11 ஆயிரம் உற்பத்தி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
இந்த நிதியாண்டில் பயிர் செய்த விவசாயிகள் விண்ணப்பங்களை உழவர் உதவியகத்தில் பெற்று உரிய ஆவணங்களுடன் வருகிற ஜனவரி 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க