Farm Info

Friday, 10 June 2022 05:12 PM , by: Elavarse Sivakumar

விவசாயிகளுக்கு மானிய விலையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட விவசாயிகள் இந்த அரியவாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டுப் பயனடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு விவசாயிகளுக்கு மானிய விலையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது என்று ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி கூறியுள்ளார்.

மானியம்

இதன்படி, தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அறுவடைக்கு பின்சார் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9 லட்சத்து 47 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

எந்திரங்கள்

விவசாயிகள் தங்கள் பகுதிகளில் விளையும் விளைபொருட்களை தங்கள் பகுதிகளிலேயே மதிப்புக்கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற முடியும்.
வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான மாவு அரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழைநார் பிரித்தெடுக்கும் கருவி மற்றும் கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை வழங்கப்படுகிறது.

60% மானியம்

இவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறு, குறு விவசாயிகளுக்கு 60% மானியமும் வழங்கப்படுகிறது.விவசாயிகள் மானிய விலையில் மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பெற விருப்பமுள்ள விவசாயிகள் ஈரோடு வள்ளிபுரத்தான்பாளையம் கருங்கவுண்டன்பாளையத்தில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும், கோபிசெட்டிபாளையம் தெற்கு பார்க் வீதியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு

கூடுதல் விபரங்களுக்கு mis.aed.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

தகவல்
கிருஷ்ணனுண்ணி
ஈரோடு மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

ரூபாய் நோட்டுகளில் அப்துல் கலாம் படமா?

தமிழகத்தில் புது வைரஸ் - அதிர்ச்சியில் சுகாதாரத்துறை!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)