அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 July, 2023 11:23 AM IST
varieties of rainfed groundnuts are cultivated it will help farmers

தமிழகத்தில் எண்ணெய்வித்து பயிரில் முதலிடம் வகிப்பது நிலக்கடலை தான். இந்நிலையில் விவசாயிகள் எந்த வகையான நிலக்கடலை இரகங்களை தேர்வு செய்யலாம் என்பது குறித்த தகவலை அருப்புக்கோட்டையினை சேர்ந்த வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திரசேகரன், கிரிஷி ஜாக்ரானுடன் பகிர்ந்துள்ளார். அவற்றின் விவரங்கள் பின்வருமாறு-

தமிழ்நாட்டில் சுமார் 6.20 லட்சம் எக்டரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 70% மானாவாரியாக குறிப்பாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான மதுரை, சிவகங்கை விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தான் அதிகம் பயிரிடப்படுகிறது.

நிலக்கடலை பொறுத்தளவில் தமிழ்நாட்டில் மானாவாரியில் ஆடி 18-க்கு பிறகு விதைப்பார்கள் கூடுதலான மகசூல் பெற தரமான நிலக்கடலை இரகங்களை தேர்வு செய்ய வேண்டும். அவற்றின் விவரம் பின்வருமாறு-

டி.எம்.வி7 :

இந்த இரகம் கடந்த 46 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பரவலாக பயிரிடப்படுகிறது. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. இது கொத்து கடலை இரகமாகும். இதனுடைய காய்களின் பின்பகுதி ஓட்டகத்தின் முதுகு போன்று இருப்பதைக் கொண்டு இந்த ரகத்தை மற்ற ரகங்களில் இருந்து எளிதாக கண்டிபிடிக்கலாம். இது 105 நாட்கள் வயதுடையது, மேலும் மானாவரிகேற்ற ரகமாகும் இறவையிலும் பயிரிடலாம். இதில் 49.6 % எண்ணெய் சத்து உள்ளது. இது 74% உடைப்புத்திறனும் உடையது, எக்கருக்கு 50-55 விதைபருப்பு தேவை.

டி.எம்.வி 13:

இது சிவப்புநிற பருப்புக்களை கொண்ட ரகம். இதனுடைய வயது 105 நாட்களே. பயிர் முதிர்வு காலத்துல எற்படுகின்ற வறட்சியை தாங்கும் தன்மை கொண்டது

வி.ஆர்.ஐ.2 :

இதனுடைய காய்கள் பெரியதாகவும் முக்கு எடுப்பாகவும், நடுப்பள்ளம் சற்றேறக்குறைய அதிகமாகவும் விதை பருமனாகவும் இருக்கும். இதனுடைய இலைகள் அறுவடை சமயம் வரை பசுமையாக இருப்பதால் தீவனத்திற்கு உகந்தது. இதனுடைய உடைப்புதிறன் 75%. பொதுவாக இதனுடைய இலைகள் நுனிப்பகுதி வட்ட வடிவிலான இலைகள் பின்னோக்கி வளைந்த சாம்பல் நிறத்தில் இருக்கும்.

வி.ஆர்.ஐ 3 :

இது கொத்து ரகம். 95 நாட்களில் விளைச்சல் தரக்கூடியது. இதனுடைஞய காய்கள் சிறியதாகவும், 49.5%  எண்ணெய் சத்து கொண்டதாகவும் உள்ளது. இது கார்த்திகை பட்டம் மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது.

வி.ஆர்.ஐ-6 :

இந்த இரகம் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டதால் தமிழகத்திலுள்ள மணற்பாங்கான மற்றும் செம்புரை மண்ணில் மானாவாரியாக பயிரிட ஏற்றது. துரு இலைப்புள்ளி மற்றும் மொட்டு அழுகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. இதுபோன்று தரணி, ஜே.எல் 24.கிர்னார்2, கதிரி,கோ7 போன்ற இரகங்களும் உள்ளன.

தங்களுடைய வட்டாரத்திலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி சான்று பெற்ற நிலக்கடலை விதை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். மகசூலின் அடிப்படை தரமான சான்று பெற்ற விதைகளே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

விதையே மகசூலை நிர்ணயிக்க கூடிய முக்கிய காரணியாகும். நல் விதை தேர்வு நல்ல மகசூலுக்கு வழிகாட்டும் என்பதை நினைவில் கொள்க. மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பாக சந்தேகங்கள் மற்றும் கருத்து முரண் இருப்பின் வேளாண்மை ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் அவர்களை தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம். தொடர்புக்கு: 9443570289.

மேலும் காண்க:

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட 11 வகை இரகம்- விசைத்தறி உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

English Summary: varieties of rainfed groundnuts are cultivated it will help farmers
Published on: 22 July 2023, 11:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now